தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதையை AI தொழில்நுட்பம் மூலம் வீடியோவாகப் பதிவு செய்து பகிரப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது உச்சக்கட்டத்தில் வளர்ந்து வருகின்றது. அதிலும் தற்போது அறிமுகமாகியுள்ள AI தொழில்நுட்பம் மிக வேகமாக பரவி வருகின்றது.
AI தொழில்நுட்பம் மூலம் இறந்தவர்களுடன் நாம் பேசுவது, அவர்களுடன் நாம் புகைப்படம் எடுப்பது, ஒருவரைப் போன்று மற்றவரை மாற்றுதல்,அழகாக்குதல் உள்ளிட்ட பல செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் பலவிதமான வீடியோக்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஏ.ஐ.தொழில்நுட்பத்தால் அவரது தந்தையும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் சிறு வயது முதல் தற்போது வரை அவர் கடந்து பாதை குறித்து விளக்கும் விதமாக வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை அவர் இணையத்தில் பகிர்ந்துள்ளதையடுத்து பலரும் குறித்த காணொளியைப் பார்வையிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் கடந்து வந்த பாதை; உதயநிதி பகிர்ந்த AI வீடியோ இணையத்தில் வைரல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதையை AI தொழில்நுட்பம் மூலம் வீடியோவாகப் பதிவு செய்து பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது உச்சக்கட்டத்தில் வளர்ந்து வருகின்றது. அதிலும் தற்போது அறிமுகமாகியுள்ள AI தொழில்நுட்பம் மிக வேகமாக பரவி வருகின்றது. AI தொழில்நுட்பம் மூலம் இறந்தவர்களுடன் நாம் பேசுவது, அவர்களுடன் நாம் புகைப்படம் எடுப்பது, ஒருவரைப் போன்று மற்றவரை மாற்றுதல்,அழகாக்குதல் உள்ளிட்ட பல செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் பலவிதமான வீடியோக்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.ஏ.ஐ.தொழில்நுட்பத்தால் அவரது தந்தையும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் சிறு வயது முதல் தற்போது வரை அவர் கடந்து பாதை குறித்து விளக்கும் விதமாக வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இதனை அவர் இணையத்தில் பகிர்ந்துள்ளதையடுத்து பலரும் குறித்த காணொளியைப் பார்வையிட்டு வைரலாக்கி வருகின்றனர்.