இன விடுதலைப் போரியல் வரலாற்றிலும், அதன் பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலும் தீவக மண்ணும், அதன் மக்களும் வழங்கிவரும் பங்களிப்பு மிகக்கனதியானது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்கான முதன்மை வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் சிறீதரன், தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்வதற்காக நேற்றுப் புதன்கிழமை நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டு, மக்களுடன் கலந்துரையாடும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,"தீவக மக்கள் தமிழ்த் தேசிய அரசியள் களத்தில் ஊறித் திளைத்தவர்கள். தமிழ்த் தேசியக் கொள்கையே அவர்களது மாறாத நிலைப்பாடு. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அந்தக் கொள்கைக்கான ஆணையாகவே அவர்கள் தமது வாக்குகளைப் பிரயோகிப்பார்கள். இந்த மண்ணும், மக்களும் ஒருபோதும் விலைபோகமாட்டார்கள்." - என்றார்.
தீவக மக்கள் தமிழ்த் தேசிய அரசியல் களத்தில் ஊறித் திளைத்தவர்கள் - சிறீதரன் இன விடுதலைப் போரியல் வரலாற்றிலும், அதன் பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலும் தீவக மண்ணும், அதன் மக்களும் வழங்கிவரும் பங்களிப்பு மிகக்கனதியானது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்கான முதன்மை வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் சிறீதரன், தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்வதற்காக நேற்றுப் புதன்கிழமை நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டு, மக்களுடன் கலந்துரையாடும்போதே மேற்கண்டவாறு கூறினார்.இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,"தீவக மக்கள் தமிழ்த் தேசிய அரசியள் களத்தில் ஊறித் திளைத்தவர்கள். தமிழ்த் தேசியக் கொள்கையே அவர்களது மாறாத நிலைப்பாடு. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அந்தக் கொள்கைக்கான ஆணையாகவே அவர்கள் தமது வாக்குகளைப் பிரயோகிப்பார்கள். இந்த மண்ணும், மக்களும் ஒருபோதும் விலைபோகமாட்டார்கள்." - என்றார்.