• May 16 2024

இலங்கை மக்களே அவதானம்..! 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை..! samugammedia

Chithra / Oct 8th 2023, 9:43 am
image

Advertisement


நாட்டிலுள்ள 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பதுளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, காலி, மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட, மத்துகமை மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிங் கங்கையின் நீர் மட்டம் 5.3 மீற்றராக உயர்ந்துள்ளதால் பத்தேகம பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு மாவட்டச் செயலாளர் சாந்த வீரசிங்க அறிவித்துள்ளார்.

காலி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கிங் கங்கையின் இருபுறமும் உள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

இலங்கை மக்களே அவதானம். 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை. samugammedia நாட்டிலுள்ள 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன்படி, பதுளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, காலி, மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட, மத்துகமை மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை கிங் கங்கையின் நீர் மட்டம் 5.3 மீற்றராக உயர்ந்துள்ளதால் பத்தேகம பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு மாவட்டச் செயலாளர் சாந்த வீரசிங்க அறிவித்துள்ளார்.காலி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன்படி, கிங் கங்கையின் இருபுறமும் உள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement