நான் 90களிலிருந்து இந்த தீவக மக்களின் உணர்வுகளிலிருந்து அவர்களது குரலாய் ஒலித்துக் கொண்டிருக்கின்றேனோ அதேபோன்று எனது நம்பிக்கையையும் தீவக மக்கள் வீணாக்கியது கிடையாது என ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு நான் சரியான வழிநடத்தலையும் வழிமுறையையுமே வழங்கிவருகின்றேன்.
அதனால்தான் தீவக மக்கள் எனது சேவைக்கு இன்னும் பக்கபலமாக இருந்து என்னை நாடாளுமன்றுக்கு அனுப்பி வருகின்றார்கள் என தெரிவித்த ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இம்முறையும் அந்த ஆதரவு தொடரும் என வலுவாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
வேலணை மற்றும், வடக்கு நாரந்தனை, நாரந்தனை மத்தி ஆகிய பிரதேசங்களின் மக்களுடனான சந்திப்புக்கள் இன்றையதினம் நடைபெற்றது.
இதன்போது இவ்வாறு தெரிவித்திருந்த அவர் மேலும் கூறுகையில் -
நான் 90 களிலிருந்து இந்த தீவக மக்களின் உணர்வுகளிலிருந்து அவர்களது குரலாய் ஒலித்துக் கொண்டிருக்கின்றேனோ அதேபோன்று எனது நம்பிக்கையையும் தீவக மக்கள் வீணாக்கியது கிடையாது.
குறிப்பாக எமது வழிமுறையே சாத்தியமானது என்பதும் இன்று நிரூபணமாகியுள்ளது. இதை ஏற்றுள்ளமக்கள் இம்முறை மத்தியில் உருவாகியுள்ள மாற்றம்போன்று வடக்கிலும் ஈபிடிபியிடம் அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்துவார்கள் என நம்புகின்றேன்.
மேலும் ஈ.பி.டிபியின் தேசிய நல்லிணக்கம் மத்திய அரசுடன் மட்டுமல்லாது ஏனைய இன மக்கள் மத்தியிலும் எப்போதும் வலுவாகவே இருக்கின்றது.
அதனால்தான் மக்கள் வழங்குகின்ற ஆணையின் பலத்தின் அடிப்படையிலேயே மத்தியில் உள்ள அரசாங்கத்தோடு ஆட்சியில் பங்கெடுப்பதற்கும், பேரம் பேசலுக்கும் நாடாளுமன்ற தேர்தல்களில் அதிகரித்த ஆசனங்களை வழங்குங்கள் எனவும் கோரிவருகின்றேன்.
அதனடிப்படையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், யதார்த்த அரசியலையும், ஈ.பி.டி.பி. கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் இருக்கின்ற நியாயத்தினையும் புரிந்துகொண்டு உங்களது ஆதரவு பலத்தையும் வழங்கவேண்டுமென்று.
அந்தவகையில் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது கட்சியின் இலக்கை அடைவதற்கு வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் எமது மக்கள் எமது கட்சிக்கு அணிதிரண்டு வாக்களித்து எம்மை வெற்றிபெறச் செய்வார்கள் என நம்புகின்றேன் என்றார்.
எனது நம்பிக்கையை தீவக மக்கள் வீணாக்கியது கிடையாது - டக்ளஸ் தெரிவிப்பு நான் 90களிலிருந்து இந்த தீவக மக்களின் உணர்வுகளிலிருந்து அவர்களது குரலாய் ஒலித்துக் கொண்டிருக்கின்றேனோ அதேபோன்று எனது நம்பிக்கையையும் தீவக மக்கள் வீணாக்கியது கிடையாது என ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு நான் சரியான வழிநடத்தலையும் வழிமுறையையுமே வழங்கிவருகின்றேன். அதனால்தான் தீவக மக்கள் எனது சேவைக்கு இன்னும் பக்கபலமாக இருந்து என்னை நாடாளுமன்றுக்கு அனுப்பி வருகின்றார்கள் என தெரிவித்த ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இம்முறையும் அந்த ஆதரவு தொடரும் என வலுவாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.வேலணை மற்றும், வடக்கு நாரந்தனை, நாரந்தனை மத்தி ஆகிய பிரதேசங்களின் மக்களுடனான சந்திப்புக்கள் இன்றையதினம் நடைபெற்றது.இதன்போது இவ்வாறு தெரிவித்திருந்த அவர் மேலும் கூறுகையில் -நான் 90 களிலிருந்து இந்த தீவக மக்களின் உணர்வுகளிலிருந்து அவர்களது குரலாய் ஒலித்துக் கொண்டிருக்கின்றேனோ அதேபோன்று எனது நம்பிக்கையையும் தீவக மக்கள் வீணாக்கியது கிடையாது.குறிப்பாக எமது வழிமுறையே சாத்தியமானது என்பதும் இன்று நிரூபணமாகியுள்ளது. இதை ஏற்றுள்ளமக்கள் இம்முறை மத்தியில் உருவாகியுள்ள மாற்றம்போன்று வடக்கிலும் ஈபிடிபியிடம் அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்துவார்கள் என நம்புகின்றேன்.மேலும் ஈ.பி.டிபியின் தேசிய நல்லிணக்கம் மத்திய அரசுடன் மட்டுமல்லாது ஏனைய இன மக்கள் மத்தியிலும் எப்போதும் வலுவாகவே இருக்கின்றது.அதனால்தான் மக்கள் வழங்குகின்ற ஆணையின் பலத்தின் அடிப்படையிலேயே மத்தியில் உள்ள அரசாங்கத்தோடு ஆட்சியில் பங்கெடுப்பதற்கும், பேரம் பேசலுக்கும் நாடாளுமன்ற தேர்தல்களில் அதிகரித்த ஆசனங்களை வழங்குங்கள் எனவும் கோரிவருகின்றேன்.அதனடிப்படையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், யதார்த்த அரசியலையும், ஈ.பி.டி.பி. கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் இருக்கின்ற நியாயத்தினையும் புரிந்துகொண்டு உங்களது ஆதரவு பலத்தையும் வழங்கவேண்டுமென்று.அந்தவகையில் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது கட்சியின் இலக்கை அடைவதற்கு வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் எமது மக்கள் எமது கட்சிக்கு அணிதிரண்டு வாக்களித்து எம்மை வெற்றிபெறச் செய்வார்கள் என நம்புகின்றேன் என்றார்.