• Mar 08 2026

வீடுகளுக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தி கப்பம் பெற்ற நபர்; சுத்துப்போட்டு மடக்கி பிடித்த பொலிஸார்

Chithra / Sep 17th 2025, 2:19 pm
image

 

கிரிவத்துடுவ, மில்லகஹவத்த பகுதியில் உள்ளூர்வாசிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி கப்பம் கோரும் பணியில் ஈடுபட்ட ஒருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார். 

சந்தேக நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 49 வயதுடைய பெண் ஒருவர் காயமடைந்து கஹதுடுவ வேதர   மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் மறைத்து வைத்திருந்த உள்ளூர் தயாரிப்பு கையெறி குண்டு, ஒரு லைட்டர் மற்றும் ஒரு கத்தியையும் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கிரிவத்துடுவ, மில்லகஹவத்த பகுதியில்  நபர் ஒருவர் சுற்றித் திரிந்து, வீடுகளுக்குள் புகுந்து பணம் பறிப்பதாகவும், கப்பம் செலுத்தாத ஒரு பெண்ணை அந்த நபர் சுட்டுக் காயப்படுத்தியதாகவும் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. 

சந்தேக நபர் உடனடியாக கைது செய்யப்பட்டபோது, அவர் ஒரு கையில் துப்பாக்கியையும் மறு கையில் லைட்டரையும் வைத்திருந்ததாகவும், அதிகாரிகள் தன்னை கைது செய்ய வந்தால் சுடுவதாக மிரட்டியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அந்த நேரத்தில் மிகவும் கவனமாக சந்தேக நபரை அணுகிய  அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். 

சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மாத்தறை பகுதியில் இருந்து தயாரிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது என்பது  தெரியவந்துள்ளது. 

போதைப்பொருள் பாவனைக்காக பணம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் சந்தேக நபர் கப்பம் பெற முயற்சித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

32 வயதான சந்தேக நபர் ஏற்கனவே கூர்மையான ஆயுதங்களால் நான்கு பேரை வெட்டியதற்காக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் கல்கிஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


வீடுகளுக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தி கப்பம் பெற்ற நபர்; சுத்துப்போட்டு மடக்கி பிடித்த பொலிஸார்  கிரிவத்துடுவ, மில்லகஹவத்த பகுதியில் உள்ளூர்வாசிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி கப்பம் கோரும் பணியில் ஈடுபட்ட ஒருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 49 வயதுடைய பெண் ஒருவர் காயமடைந்து கஹதுடுவ வேதர   மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் மறைத்து வைத்திருந்த உள்ளூர் தயாரிப்பு கையெறி குண்டு, ஒரு லைட்டர் மற்றும் ஒரு கத்தியையும் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரிவத்துடுவ, மில்லகஹவத்த பகுதியில்  நபர் ஒருவர் சுற்றித் திரிந்து, வீடுகளுக்குள் புகுந்து பணம் பறிப்பதாகவும், கப்பம் செலுத்தாத ஒரு பெண்ணை அந்த நபர் சுட்டுக் காயப்படுத்தியதாகவும் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. சந்தேக நபர் உடனடியாக கைது செய்யப்பட்டபோது, அவர் ஒரு கையில் துப்பாக்கியையும் மறு கையில் லைட்டரையும் வைத்திருந்ததாகவும், அதிகாரிகள் தன்னை கைது செய்ய வந்தால் சுடுவதாக மிரட்டியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த நேரத்தில் மிகவும் கவனமாக சந்தேக நபரை அணுகிய  அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மாத்தறை பகுதியில் இருந்து தயாரிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது என்பது  தெரியவந்துள்ளது. போதைப்பொருள் பாவனைக்காக பணம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் சந்தேக நபர் கப்பம் பெற முயற்சித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.32 வயதான சந்தேக நபர் ஏற்கனவே கூர்மையான ஆயுதங்களால் நான்கு பேரை வெட்டியதற்காக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேக நபர் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் கல்கிஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement