• Apr 28 2024

நேர்மையின் உச்சம்..! சிங்கள இளைஞன் ஒருவரின் செயலால் இன்ப அதிர்ச்சி..!

Chithra / Mar 11th 2024, 10:25 am
image

Advertisement

 

கொழும்பு - வெள்ளவத்தையில் சிங்கள இளைஞன் ஒருவரின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கல்கிஸ்சையில் இருந்து முச்சக்கரவண்டி மூலம் வெள்ளவத்தைக்கு சென்ற பெண் ஒருவர் தங்க நகை ஒன்றை தவற விட்டுள்ளார்.

சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான தங்க செயின் ஒன்றே இவ்வாறு தவறவிடப்பட்டுள்ளது. 

ubar வலையமைப்பு ஊடாக பதிவு செய்யப்பட்ட சம்பத் என்ற சாரதியின் முச்சக்கர வண்டியில் குறித்த பெண் பயணித்துள்ளார்.

எனினும் பாதிக்கப்பட்டவர்கள் ubarயை தொடர்பு கொண்டு சம்பத் என்ற சாரதியிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர்.

தவறவிடப்பட்ட தங்க செயின் தன்னிடம் இருப்பதாகவும் கொண்டு வந்து தருவதாகவும் குறித்த சாரதி தெரிவித்துள்ளார்.

சொன்னது போன்று உரிய விலாசத்திற்கு கொண்டு வந்த தங்க செயினை சாரதி கொடுத்துள்ளதாக, நகையின் உரிமையாளர் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மக்களை ஏமாற்றி பிழைக்கும் இக்காலத்தில் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகையை கொண்டு வந்த கொடுத்த குறித்த சாரதி நேர்மையின் உச்சம் என பலரும் பாராட்டியுள்ளனர்.

 


நேர்மையின் உச்சம். சிங்கள இளைஞன் ஒருவரின் செயலால் இன்ப அதிர்ச்சி.  கொழும்பு - வெள்ளவத்தையில் சிங்கள இளைஞன் ஒருவரின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,கல்கிஸ்சையில் இருந்து முச்சக்கரவண்டி மூலம் வெள்ளவத்தைக்கு சென்ற பெண் ஒருவர் தங்க நகை ஒன்றை தவற விட்டுள்ளார்.சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான தங்க செயின் ஒன்றே இவ்வாறு தவறவிடப்பட்டுள்ளது. ubar வலையமைப்பு ஊடாக பதிவு செய்யப்பட்ட சம்பத் என்ற சாரதியின் முச்சக்கர வண்டியில் குறித்த பெண் பயணித்துள்ளார்.எனினும் பாதிக்கப்பட்டவர்கள் ubarயை தொடர்பு கொண்டு சம்பத் என்ற சாரதியிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர்.தவறவிடப்பட்ட தங்க செயின் தன்னிடம் இருப்பதாகவும் கொண்டு வந்து தருவதாகவும் குறித்த சாரதி தெரிவித்துள்ளார்.சொன்னது போன்று உரிய விலாசத்திற்கு கொண்டு வந்த தங்க செயினை சாரதி கொடுத்துள்ளதாக, நகையின் உரிமையாளர் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.மக்களை ஏமாற்றி பிழைக்கும் இக்காலத்தில் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகையை கொண்டு வந்த கொடுத்த குறித்த சாரதி நேர்மையின் உச்சம் என பலரும் பாராட்டியுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement