• Apr 01 2025

வவுனியாவில் வாக்குச்சீட்டை பேஸ்புக்கில் பகிர்ந்த அரசியல் பிரமுகர்..!

Sharmi / Sep 5th 2024, 10:50 pm
image

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பிற்கான வவுனியா மாவட்ட நிதிப் பொறுப்பாளருமான ஒரு அரசியல் பிரமுகர் தனது முகநூலில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டை பொதுவேட்பாளருக்கு புள்ளடி இடப்பட்டவாறு பகிர்ந்துள்ளார்

இன்றைய தினம் இரண்டாவது நாளாக தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்று வரும் நிலையில், குறித்த நபர் வாக்குச்சீட்டை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ள செயல்பாடு என தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்

இதேவேளை குறித்த சமூக வலைத்தள பதிவிற்கு எதிராக வவுனியா மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் , ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவிடமும், தேர்தல் கண்காணிப்பு குழுக்களிடமும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.


வவுனியாவில் வாக்குச்சீட்டை பேஸ்புக்கில் பகிர்ந்த அரசியல் பிரமுகர். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பிற்கான வவுனியா மாவட்ட நிதிப் பொறுப்பாளருமான ஒரு அரசியல் பிரமுகர் தனது முகநூலில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டை பொதுவேட்பாளருக்கு புள்ளடி இடப்பட்டவாறு பகிர்ந்துள்ளார்இன்றைய தினம் இரண்டாவது நாளாக தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்று வரும் நிலையில், குறித்த நபர் வாக்குச்சீட்டை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ள செயல்பாடு என தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்இதேவேளை குறித்த சமூக வலைத்தள பதிவிற்கு எதிராக வவுனியா மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் , ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவிடமும், தேர்தல் கண்காணிப்பு குழுக்களிடமும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now