• Sep 20 2024

13ஜ வைத்து அரசியல் விளையாட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது – இனபிளவு என்பது நிரந்தரம் - செந்திவேல்!

Tamil nila / Feb 12th 2023, 4:05 pm
image

Advertisement

13வது திருத்தச்சட்டம் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் சில மதத்தலைவர்களும் அரசியல் விளையாட்டினை ஆரம்பித்துள்ளதாக புதிய ஜனநாயக மாக்சிச 

லெனினிசக் கட்சியின் பொதுச்செயலாளர் கா.செந்திவேல் குற்றம் சுமத்தியுள்ளார்.


கொக்குவிலில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.


அதேபோன்று இலங்கையில் இன முரண்பாடு என்பது நிரந்தரமாக இருக்கவேண்டுமென இந்தியாவும் அமெரிக்காவும் விரும்புவதாகவும் அவ்வாறான இனப்பிளவு இருந்தால் மட்டு தமது நலன்களை 

நிறைவேற்றிக்கொள்ள முடியுமென்ற நீண்டகால வரலாற்றை அவதானிக்க முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


சிங்களவர்கள் மத்தியிலுள்ள பேரினவாதிகளும் தமிழ் மக்கள் மத்தியிலுள்ள தமிழ் தேசிய வாதிகளும் சரி பதவிகளுக்காக மட்டுமே இவ்வாறு மக்கள் முன்தோன்றுவதாகவும் குறிப்பாக ஆளும்வர்க்க அரசியலையே இவர்கள் முன்னெடுப்பதாகவும் ஆனால் உழைக்கும் மக்களின் எந்த நன்மையும் இதனால் கிடைப்பதில்லை என்றும்; கா.செந்திவேல் குற்றம் சுமத்தியுள்ளார்.


75ஆவது சுதந்திர தினம் தமிழ மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் சுதந்திரம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மக்களுக்கு சார்பான ஆட்சி முறையொன்று உருவாக்கப்படவேண்டும் என்றும் ஆனால் இதனை ஆளும் வர்க்கமும் அந்நிய சக்திகளும் இதனை இலகுவில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் ; கா.செந்திவேல் குறிப்பிட்டுள்ளார்.


13ஜ வைத்து அரசியல் விளையாட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது – இனபிளவு என்பது நிரந்தரம் - செந்திவேல் 13வது திருத்தச்சட்டம் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் சில மதத்தலைவர்களும் அரசியல் விளையாட்டினை ஆரம்பித்துள்ளதாக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச்செயலாளர் கா.செந்திவேல் குற்றம் சுமத்தியுள்ளார்.கொக்குவிலில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.அதேபோன்று இலங்கையில் இன முரண்பாடு என்பது நிரந்தரமாக இருக்கவேண்டுமென இந்தியாவும் அமெரிக்காவும் விரும்புவதாகவும் அவ்வாறான இனப்பிளவு இருந்தால் மட்டு தமது நலன்களை நிறைவேற்றிக்கொள்ள முடியுமென்ற நீண்டகால வரலாற்றை அவதானிக்க முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.சிங்களவர்கள் மத்தியிலுள்ள பேரினவாதிகளும் தமிழ் மக்கள் மத்தியிலுள்ள தமிழ் தேசிய வாதிகளும் சரி பதவிகளுக்காக மட்டுமே இவ்வாறு மக்கள் முன்தோன்றுவதாகவும் குறிப்பாக ஆளும்வர்க்க அரசியலையே இவர்கள் முன்னெடுப்பதாகவும் ஆனால் உழைக்கும் மக்களின் எந்த நன்மையும் இதனால் கிடைப்பதில்லை என்றும்; கா.செந்திவேல் குற்றம் சுமத்தியுள்ளார்.75ஆவது சுதந்திர தினம் தமிழ மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் சுதந்திரம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மக்களுக்கு சார்பான ஆட்சி முறையொன்று உருவாக்கப்படவேண்டும் என்றும் ஆனால் இதனை ஆளும் வர்க்கமும் அந்நிய சக்திகளும் இதனை இலகுவில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் ; கா.செந்திவேல் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement