போதைப்பொருள் வர்த்தகர்களுக்குக் கடந்த காலத்தில் இருந்த அரசியல் பாதுகாப்பு தற்போது முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருளுக்கு எதிரான விசாரணைகளின் போது எந்தவொரு அதிகாரிக்கும் எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நேற்று புதன்கிழமை பிற்பகல் நடைபெற்ற, போதைப்பொருள் பேரழிவுக்கு எதிரான “முழு நாடுமே ஒன்றாக” மட்டக்களப்பு மாவட்ட விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி கூறியுள்ளார்.
அங்கு ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,
"நாம் ஓர் அரசு என்ற வகையில் பல பிரதான சவால்கள் குறித்து அவதானம் செலுத்தி வருகின்றோம். அதில் பலமான பொருளாதாரமொன்றைக் கட்டியெழுப்பும் சவாலே முதலாவதாகும். அண்மைய 'டித்வா' சூறாவளிப் பேரழிவு மற்றும் மத்திய கிழக்கு பிராந்திய போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வு என்பன பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இருப்பினும், எமது வலுவான பொருளாதார நிர்வாகத்தின் விளைவாக, இலங்கை வரலாற்றில் அதிகப்படியான நிதியைக் கொண்ட திறைசேரிக் கணக்கொன்று தற்போது நம்மிடம் உள்ளது. இதனால்தான் சூறாவளிப் பாதிப்புகளுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாவையும், எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டண நிவாரணங்களுக்காக 10 ஆயிரம் கோடி ரூபாவையும் ஒதுக்கீடு செய்ய நமக்கு முடிந்தது. தற்போதைய டொலர் நெருக்கடி தற்காலிகமானது, அதற்கு நாம் வலுவாக முகம் கொடுப்போம்.
இன்று நமது முதன்மையான நோக்கம், இந்த போதைப்பொருட்களிலிருந்து நமது தாய்நாட்டையும் இளைய தலைமுறையினரையும் விடுவிப்பதாகும். 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டு கடந்த 6 மாத காலத்துக்குள், 21 வயதுக்கும் குறைந்த 5 ஆயிரத்து 122 ஆண் பிள்ளைகளும், 128 பெண் பிள்ளைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். வயது, அந்தஸ்து, மதகுருமார்கள் அல்லது சாதாரண பிரஜைகள் என்ற பாகுபாடின்றி இப்பேரழிவு சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் பரவியுள்ளது.
இந்த வியாபாரம் வளர்வதற்கு அரசியல் பாதுகாப்பே முக்கிய காரணமாக இருந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க ஆணையின் மூலம், அந்த அரசியல் பாதுகாப்பை நாம் தற்போது முழுமையாக முடிவுக்குக் கொண்டுவந்துள்ளோம். அதிகாரிகள் எவ்வித அழுத்தமுமின்றி கடமையாற்றக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, கடந்த 6 மாதங்களுக்குள் 1943 கிலோகிராம் ஹெரோயின், 2008 கிலோகிராம் ஐஸ் மற்றும் 40,755 கிலோகிராம் கஞ்சா என்பன எமது பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை வழங்கிய தனித்துவமான பங்களிப்பை நான் பாராட்டுகின்றேன்.
போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய பாதாள உலகத்தை நாம் முற்றாக ஒழிக்க வேண்டும். வெளிநாடுகளில் தங்கியிருந்த 28 பாதாள உலகக் குழு உறுப்பினர்களைக் கைது செய்து இலங்கைக்குக் கொண்டு வந்துள்ளோம். சிறைச்சாலைகளுக்கு உள்ளிருந்து செயற்படுபவர்களைக் கட்டுப்படுத்த இவர்களுக்காகவே விசேட சிறைச்சாலைகளை உருவாக்கியுள்ளோம். கடந்த 6 மாதங்களில் 83 டி - 56 ரகத் துப்பாக்கிகள் உட்பட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆயுதம் ஏந்திய குற்றக் கும்பல்களை ஒடுக்குவதற்காக விசேட சட்டவரைவு ஒன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற நாம் எதிர்பார்த்துள்ளோம்.
ஜனாதிபதி முதல் கிராம உத்தியோகத்தர் வரை அனைவரும் சட்டத்தின் முன்னிலையில் சமமானவர்களாவர். சட்டம் நெருங்கும்போது சிலர் பதற்றமடைந்து, ஆட்களைப் பஸ்களில் ஏற்றி வந்து கூச்சலிடுவதால் சட்ட அமுலாக்கத்தை முடக்க முடியாது. சட்டம் வளைந்து கொடுக்காது, அனைவருக்கும் சமமாக அமுலாகும்.
தற்போதைய சட்டக் கட்டமைப்பு போதாவிடின் புதிய சட்டங்கள் இயற்றப்படும். அத்துடன், கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை மிகக் குறுகிய காலத்திற்குள் அழிப்பதற்கான சட்டங்களை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்கள் இறுதிப் பகுதிக்கு வந்துள்ளன. துறைமுகம், விமான நிலையம் மற்றும் சுங்கத் திணைக்களம் போன்ற எவ்விடத்திற்கும் புலனாய்வு அதிகாரிகள் நுழைவதற்கான அதிகாரம் வழங்கப்படும்.
மாற்றங்களை ஏற்படுத்த அரசு, மத ஸ்தாபனங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அர்ப்பணிப்புடன் ஒன்றிணைய வேண்டும்." - என்று ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர்களான ஆனந்த விஜேபால, சுனில் ஹந்துன்னெத்தி, கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஜயந்த லால் ரத்னசேகர, பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, நாடா ளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா, பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் அரச உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு இருந்த அரசியல் பாதுகாப்பு தற்போது முற்றாக ஒழிப்பு-ஜனாதிபதி தெரிவிப்பு போதைப்பொருள் வர்த்தகர்களுக்குக் கடந்த காலத்தில் இருந்த அரசியல் பாதுகாப்பு தற்போது முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருளுக்கு எதிரான விசாரணைகளின் போது எந்தவொரு அதிகாரிக்கும் எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நேற்று புதன்கிழமை பிற்பகல் நடைபெற்ற, போதைப்பொருள் பேரழிவுக்கு எதிரான “முழு நாடுமே ஒன்றாக” மட்டக்களப்பு மாவட்ட விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி கூறியுள்ளார்.அங்கு ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,"நாம் ஓர் அரசு என்ற வகையில் பல பிரதான சவால்கள் குறித்து அவதானம் செலுத்தி வருகின்றோம். அதில் பலமான பொருளாதாரமொன்றைக் கட்டியெழுப்பும் சவாலே முதலாவதாகும். அண்மைய 'டித்வா' சூறாவளிப் பேரழிவு மற்றும் மத்திய கிழக்கு பிராந்திய போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வு என்பன பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.இருப்பினும், எமது வலுவான பொருளாதார நிர்வாகத்தின் விளைவாக, இலங்கை வரலாற்றில் அதிகப்படியான நிதியைக் கொண்ட திறைசேரிக் கணக்கொன்று தற்போது நம்மிடம் உள்ளது. இதனால்தான் சூறாவளிப் பாதிப்புகளுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாவையும், எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டண நிவாரணங்களுக்காக 10 ஆயிரம் கோடி ரூபாவையும் ஒதுக்கீடு செய்ய நமக்கு முடிந்தது. தற்போதைய டொலர் நெருக்கடி தற்காலிகமானது, அதற்கு நாம் வலுவாக முகம் கொடுப்போம்.இன்று நமது முதன்மையான நோக்கம், இந்த போதைப்பொருட்களிலிருந்து நமது தாய்நாட்டையும் இளைய தலைமுறையினரையும் விடுவிப்பதாகும். 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டு கடந்த 6 மாத காலத்துக்குள், 21 வயதுக்கும் குறைந்த 5 ஆயிரத்து 122 ஆண் பிள்ளைகளும், 128 பெண் பிள்ளைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். வயது, அந்தஸ்து, மதகுருமார்கள் அல்லது சாதாரண பிரஜைகள் என்ற பாகுபாடின்றி இப்பேரழிவு சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் பரவியுள்ளது.இந்த வியாபாரம் வளர்வதற்கு அரசியல் பாதுகாப்பே முக்கிய காரணமாக இருந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க ஆணையின் மூலம், அந்த அரசியல் பாதுகாப்பை நாம் தற்போது முழுமையாக முடிவுக்குக் கொண்டுவந்துள்ளோம். அதிகாரிகள் எவ்வித அழுத்தமுமின்றி கடமையாற்றக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.இதன் விளைவாக, கடந்த 6 மாதங்களுக்குள் 1943 கிலோகிராம் ஹெரோயின், 2008 கிலோகிராம் ஐஸ் மற்றும் 40,755 கிலோகிராம் கஞ்சா என்பன எமது பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை வழங்கிய தனித்துவமான பங்களிப்பை நான் பாராட்டுகின்றேன்.போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய பாதாள உலகத்தை நாம் முற்றாக ஒழிக்க வேண்டும். வெளிநாடுகளில் தங்கியிருந்த 28 பாதாள உலகக் குழு உறுப்பினர்களைக் கைது செய்து இலங்கைக்குக் கொண்டு வந்துள்ளோம். சிறைச்சாலைகளுக்கு உள்ளிருந்து செயற்படுபவர்களைக் கட்டுப்படுத்த இவர்களுக்காகவே விசேட சிறைச்சாலைகளை உருவாக்கியுள்ளோம். கடந்த 6 மாதங்களில் 83 டி - 56 ரகத் துப்பாக்கிகள் உட்பட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆயுதம் ஏந்திய குற்றக் கும்பல்களை ஒடுக்குவதற்காக விசேட சட்டவரைவு ஒன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற நாம் எதிர்பார்த்துள்ளோம்.ஜனாதிபதி முதல் கிராம உத்தியோகத்தர் வரை அனைவரும் சட்டத்தின் முன்னிலையில் சமமானவர்களாவர். சட்டம் நெருங்கும்போது சிலர் பதற்றமடைந்து, ஆட்களைப் பஸ்களில் ஏற்றி வந்து கூச்சலிடுவதால் சட்ட அமுலாக்கத்தை முடக்க முடியாது. சட்டம் வளைந்து கொடுக்காது, அனைவருக்கும் சமமாக அமுலாகும்.தற்போதைய சட்டக் கட்டமைப்பு போதாவிடின் புதிய சட்டங்கள் இயற்றப்படும். அத்துடன், கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை மிகக் குறுகிய காலத்திற்குள் அழிப்பதற்கான சட்டங்களை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்கள் இறுதிப் பகுதிக்கு வந்துள்ளன. துறைமுகம், விமான நிலையம் மற்றும் சுங்கத் திணைக்களம் போன்ற எவ்விடத்திற்கும் புலனாய்வு அதிகாரிகள் நுழைவதற்கான அதிகாரம் வழங்கப்படும்.மாற்றங்களை ஏற்படுத்த அரசு, மத ஸ்தாபனங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அர்ப்பணிப்புடன் ஒன்றிணைய வேண்டும்." - என்று ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.இந்நிகழ்வில் அமைச்சர்களான ஆனந்த விஜேபால, சுனில் ஹந்துன்னெத்தி, கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஜயந்த லால் ரத்னசேகர, பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, நாடா ளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா, பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் அரச உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.