• May 23 2025

பேரினவாத சக்திகளின் சூழ்நிலை கைதியாக இருக்கும் ஜனாதிபதி:ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டு..!

Sharmi / Apr 24th 2025, 11:44 am
image

பேரினவாத சக்திகளின் ஒர் சூழ்நிலை கைதியாக ஜனாதிபதி இருப்பதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கம்( குருபரன்) தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் காரைதீவு பிரதேச சபையில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வும் ஊடக சந்திப்பும் காரைதீவு பொது நூலக கேட்போர் மண்டபத்தில்   நேற்றையதினம்(23) மாலை நடைபெற்றது.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஹென்றி மகேந்திரன் தலைமையில் இவ் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

இதன்போது ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி பேரினவாத சக்திகளின் ஒர் சூழ்நிலை கைதியாக இருக்கின்றார்.

இதுவரை ஜனாதிபதியை விமர்சிப்பதற்கான எந்த சந்தர்ப்பமும் எமக்கு கிடைக்கவில்லை.

இந்த நாட்டில் எந்த ஜனாதிபதியாக வந்தாலும்  இவ்வாறு சூழ்நிலை கைதியாகவே இருப்பார்.

அத்துடன் ஜனாதிபதி செய்வார்  என எதிர்பார்த்த எந்தவொரு விடயங்களையும்  அவர் செய்யவில்லை. எனவே அவர் பொய் தான் பேசுகிறார் என்பதை எம்மால்  புரிந்து கொள்ள முடியும்.

எங்களது உள்ளுராட்சி மன்ற வேட்பாளர்களுக்கும் ஜனாதிபதி மாதிரி பொய் வாக்குறுதிகளை எமது மக்களுக்கு பிரச்சார வேளையில் வழங்க வேண்டாம் என தெளிவாக அறிவுறுத்தியுள்ளோம்.மக்கள் இவ்வாறான பொய் வாக்குறுதிகளால் தான் சலித்து  போயுள்ளனர்.

எமது வட கிழக்கில் தமிழ் தேசிய அரசியல் வீழ்ச்சிக்கு  காரணம் கொள்கைகள் அல்ல.தவறான வாக்குறுதிகளும் வாக்குறுதிகளை மீறியமையும் ஆகும் எனவும் அவர் தெரிவித்தார்.







பேரினவாத சக்திகளின் சூழ்நிலை கைதியாக இருக்கும் ஜனாதிபதி:ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டு. பேரினவாத சக்திகளின் ஒர் சூழ்நிலை கைதியாக ஜனாதிபதி இருப்பதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கம்( குருபரன்) தெரிவித்தார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் காரைதீவு பிரதேச சபையில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வும் ஊடக சந்திப்பும் காரைதீவு பொது நூலக கேட்போர் மண்டபத்தில்   நேற்றையதினம்(23) மாலை நடைபெற்றது.ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஹென்றி மகேந்திரன் தலைமையில் இவ் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.இதன்போது ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,ஜனாதிபதி பேரினவாத சக்திகளின் ஒர் சூழ்நிலை கைதியாக இருக்கின்றார்.இதுவரை ஜனாதிபதியை விமர்சிப்பதற்கான எந்த சந்தர்ப்பமும் எமக்கு கிடைக்கவில்லை.இந்த நாட்டில் எந்த ஜனாதிபதியாக வந்தாலும்  இவ்வாறு சூழ்நிலை கைதியாகவே இருப்பார்.அத்துடன் ஜனாதிபதி செய்வார்  என எதிர்பார்த்த எந்தவொரு விடயங்களையும்  அவர் செய்யவில்லை. எனவே அவர் பொய் தான் பேசுகிறார் என்பதை எம்மால்  புரிந்து கொள்ள முடியும்.எங்களது உள்ளுராட்சி மன்ற வேட்பாளர்களுக்கும் ஜனாதிபதி மாதிரி பொய் வாக்குறுதிகளை எமது மக்களுக்கு பிரச்சார வேளையில் வழங்க வேண்டாம் என தெளிவாக அறிவுறுத்தியுள்ளோம்.மக்கள் இவ்வாறான பொய் வாக்குறுதிகளால் தான் சலித்து  போயுள்ளனர்.எமது வட கிழக்கில் தமிழ் தேசிய அரசியல் வீழ்ச்சிக்கு  காரணம் கொள்கைகள் அல்ல.தவறான வாக்குறுதிகளும் வாக்குறுதிகளை மீறியமையும் ஆகும் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now