ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பல நாடுகளின் அரச தலைவர்களை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில் நேற்று ஈடுபட்டுள்ளார்.
புது டில்லியில் நடைபெற்று வரும் AI Impact 2026 உச்சிமாநாட்டில் பங்குபற்றியுள்ள நிலையில், இந்த அரச தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.
அதற்கமைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் ஆகியோருக்கு இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தை பிற்பகல் நடைபெற்றது.
அதேநேரம், பிரேசில் ஜனாதிபதி லுலா த சில்வாவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அபுதாபியின் முடிக்குரிய இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உம் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
அத்துடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் பூட்டான் பிரதமர் ஷெரிங் தொப்கேவுக்கும் இடையிலும் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
பல நாடுகளின் அரச தலைவர்களை சந்தித்த ஜனாதிபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பல நாடுகளின் அரச தலைவர்களை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில் நேற்று ஈடுபட்டுள்ளார். புது டில்லியில் நடைபெற்று வரும் AI Impact 2026 உச்சிமாநாட்டில் பங்குபற்றியுள்ள நிலையில், இந்த அரச தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. அதற்கமைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் ஆகியோருக்கு இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தை பிற்பகல் நடைபெற்றது. அதேநேரம், பிரேசில் ஜனாதிபதி லுலா த சில்வாவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அபுதாபியின் முடிக்குரிய இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உம் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். அத்துடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் பூட்டான் பிரதமர் ஷெரிங் தொப்கேவுக்கும் இடையிலும் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.