ஜனாதிபதி தேர்தல் குறித்த காலப்பகுதியில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க உறுதியளித்துள்ளார்.
அண்மையில் காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது உரையாற்றிய ரத்நாயக்க,
2019 நவம்பரில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியின் பதவிக்காலம் 2024 நவம்பரில் முடிவடைவதாக தெரிவித்தார்.
இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதி ஒருவர் பதவியில் இருந்து விலகி வேறொருவர் பதவியேற்றாலும் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியின் ஐந்து வருட பதவிக்காலம் மாறாது என அவர் விளக்கினார்.
சட்டத்தின் பிரகாரம், தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சட்டத்திற்கு அமைய ஜனாதிபதி தேர்தலை குறித்த காலப்பகுதியில் நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு பொறுப்பு என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் குறித்த காலப்பகுதியில் நடத்தப்படும்.தேர்தல்கள் ஆணைக்குழு திட்டவட்டம்.samugammedia ஜனாதிபதி தேர்தல் குறித்த காலப்பகுதியில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க உறுதியளித்துள்ளார்.அண்மையில் காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது உரையாற்றிய ரத்நாயக்க, 2019 நவம்பரில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியின் பதவிக்காலம் 2024 நவம்பரில் முடிவடைவதாக தெரிவித்தார்.இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதி ஒருவர் பதவியில் இருந்து விலகி வேறொருவர் பதவியேற்றாலும் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியின் ஐந்து வருட பதவிக்காலம் மாறாது என அவர் விளக்கினார்.சட்டத்தின் பிரகாரம், தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சட்டத்திற்கு அமைய ஜனாதிபதி தேர்தலை குறித்த காலப்பகுதியில் நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு பொறுப்பு என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.