• Jun 02 2026

விசேட நாட்களில் அதிர்ச்சி கொடுத்த தங்கத்தின் விலை; மீண்டும் எகிறியது

Chithra / Jun 1st 2026, 12:01 pm
image

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (01) அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.


அதன்படி கடந்த 29 ஆம் திகதி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 387,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 1000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 388,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.


அதேபோல் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 356,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில்,  357,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.


இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,625 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.


தொடர்ச்சியாக தங்க விலை உயர்வதால், குறிப்பாக திருமண காலம் மற்றும் விசேட நாட்களில் நகை வாங்கும் பொதுமக்கள் மத்தியில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விசேட நாட்களில் அதிர்ச்சி கொடுத்த தங்கத்தின் விலை; மீண்டும் எகிறியது இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (01) அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.அதன்படி கடந்த 29 ஆம் திகதி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 387,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 1000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 388,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 356,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில்,  357,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,625 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.தொடர்ச்சியாக தங்க விலை உயர்வதால், குறிப்பாக திருமண காலம் மற்றும் விசேட நாட்களில் நகை வாங்கும் பொதுமக்கள் மத்தியில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement