நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளது.
அந்தவகையில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மஸ்கெலியா, சாமிமலை, நல்லதண்ணி,லக்கம் நகரில் உள்ள அனைத்து மரக்கறி கடைகளில் கத்தரிக்காய் கிலோ ஒன்று 640/=ரூபாவாகவும் போஞ்சி கிலோ ஒன்று 960/= ரூபாவாகவும் பச்சை மிளகாய் கிலோ ஒன்று 2100/= ரூபாவாகவும், முட்டை கோவா கிலோ ஒன்று 800/=ரூபாவாகவும் கேரட் கிலோ ஒன்று 960/=ரூபாவாகவும் தக்காளி கிலோ ஒன்று 800/=ரூபாவாகவும் பீட் கிலோ ஒன்று 720/= ரூபாவாகவும் மரவள்ளி கிழங்கு ஒரு கிலோ 180/=ரூபாவாகவும் விற்பனை செய்யபட்டு வருகிறது.
என்றுமில்லாதவாறு மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறிகள் விலை அதிகரித்துள்ளதுடன் இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மரக்கறிகளின் விலை நாளுக்கு நாள் உயர்வு. மக்கள் விசனம்.samugammedia நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளது.அந்தவகையில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மஸ்கெலியா, சாமிமலை, நல்லதண்ணி,லக்கம் நகரில் உள்ள அனைத்து மரக்கறி கடைகளில் கத்தரிக்காய் கிலோ ஒன்று 640/=ரூபாவாகவும் போஞ்சி கிலோ ஒன்று 960/= ரூபாவாகவும் பச்சை மிளகாய் கிலோ ஒன்று 2100/= ரூபாவாகவும், முட்டை கோவா கிலோ ஒன்று 800/=ரூபாவாகவும் கேரட் கிலோ ஒன்று 960/=ரூபாவாகவும் தக்காளி கிலோ ஒன்று 800/=ரூபாவாகவும் பீட் கிலோ ஒன்று 720/= ரூபாவாகவும் மரவள்ளி கிழங்கு ஒரு கிலோ 180/=ரூபாவாகவும் விற்பனை செய்யபட்டு வருகிறது.என்றுமில்லாதவாறு மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறிகள் விலை அதிகரித்துள்ளதுடன் இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.