• Feb 05 2025

மரக்கறிகளின் விலைகளும் நாளுக்கு நாள் உயர்வு..!

Sharmi / Dec 7th 2024, 9:10 am
image

நாட்டில் கடந்த சில வாரங்களாக நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் மரக்கறிகளின் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் பல்வேறு பகுதிகளிலும் மரக்கறி செய்கை நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது.

அதேவேளை, நுவரெலியா மற்றும் மலையக பிரதேசங்களில் இருந்தும் மரக்கறிகள் உரிய முறையில் சந்தைகளுக்கு கொண்டு செல்லப்படுவதில்லை எனவும் தொடர் மழையால் காய்கறிகளை அறுவடை செய்ய முடியாமல் அறுவடையை மேற்கொள்ள முடியாத நிலை காரணமாகவே விலை அதிகரிப்பு போக்கு காணப்படுவதாக வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இனிவரும் காலங்களில் மீண்டும் அறுவடை தொடங்குவதால் மரக்கறிகளின் விலை ஓரளவு குறையும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மரக்கறிகளின் விலைகளும் நாளுக்கு நாள் உயர்வு. நாட்டில் கடந்த சில வாரங்களாக நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் மரக்கறிகளின் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் பல்வேறு பகுதிகளிலும் மரக்கறி செய்கை நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது.அதேவேளை, நுவரெலியா மற்றும் மலையக பிரதேசங்களில் இருந்தும் மரக்கறிகள் உரிய முறையில் சந்தைகளுக்கு கொண்டு செல்லப்படுவதில்லை எனவும் தொடர் மழையால் காய்கறிகளை அறுவடை செய்ய முடியாமல் அறுவடையை மேற்கொள்ள முடியாத நிலை காரணமாகவே விலை அதிகரிப்பு போக்கு காணப்படுவதாக வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இனிவரும் காலங்களில் மீண்டும் அறுவடை தொடங்குவதால் மரக்கறிகளின் விலை ஓரளவு குறையும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement