நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்களை ஒடுக்கும் விசேட நடவடிக்கையான யுக்திய நடவடிக்கையானது கடந்த இரு வாரங்களுக்கு மேலாக இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறான நிலையில் யுக்திய நடவடிக்கையில் ஆயிரக்கணக்காணோர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தெஹிவளை மற்றும் இரத்மலானை பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட யுத்திய நடவடிக்கையிலிருந்து தப்பிச் சென்ற 'சோட்டா' வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் ஹொரண சுனாமிவத்த பிரதேசத்தில் ஆலயமொன்றில் பூசகராக பணியாற்றி வந்த நிலையிலேயேகைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் குறித்த ஆலயத்தில், 1500 ரூபாவுக்கு ஜாதகம் பார்த்து வந்ததாகவும் சந்தேக நபருடன் சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை வலான ஊழல் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜாதகம் பார்த்த ஆலய பூசகர் அதிரடியாக கைது. வெளியான காரணம். samugammedia நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்களை ஒடுக்கும் விசேட நடவடிக்கையான யுக்திய நடவடிக்கையானது கடந்த இரு வாரங்களுக்கு மேலாக இடம்பெற்று வருகின்றது. இவ்வாறான நிலையில் யுக்திய நடவடிக்கையில் ஆயிரக்கணக்காணோர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், தெஹிவளை மற்றும் இரத்மலானை பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட யுத்திய நடவடிக்கையிலிருந்து தப்பிச் சென்ற 'சோட்டா' வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சந்தேகநபர் ஹொரண சுனாமிவத்த பிரதேசத்தில் ஆலயமொன்றில் பூசகராக பணியாற்றி வந்த நிலையிலேயேகைது செய்யப்பட்டுள்ளார்.அதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் குறித்த ஆலயத்தில், 1500 ரூபாவுக்கு ஜாதகம் பார்த்து வந்ததாகவும் சந்தேக நபருடன் சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை வலான ஊழல் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.