• Aug 22 2025

பாடசாலை விளையாட்டுத்துறை சார்ந்த பிரச்சினைகள் குறித்து பிரதமர் விஷேட கவனம்!

Chithra / Aug 22nd 2025, 10:29 am
image


கல்வி அமைச்சு மற்றும் விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள், பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேற்று பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது, விளையாட்டுத்துறை சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கல்வி அமைச்சுக்கும் விளையாட்டு அமைச்சுக்கும் இடையில் ஒரு தொடர்பாடலை ஏற்படுத்துவதன் அவசியம் குறித்து இருதரப்பு அதிகாரிகளும் சுட்டிக்காட்டினர். 

அத்துடன், விளையாட்டுச் சங்கங்களில் நிலவும் அனுமதிப்பத்திரப் பிரச்சினைகள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களால் ஏற்படும் வன்முறைகள், பாடசாலை விளையாட்டுத்துறையை மேம்படுத்துதல் ஆகியன தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

தற்போதைய போட்டி மனப்பான்மைக்கு மாறாக, மாணவர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை முதன்மைப்படுத்தும் விளையாட்டுக் கலாசாரத்தை பாடசாலைகளில் உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், தற்போதைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு கல்வி அமைச்சும் விளையாட்டு அமைச்சும் தொடர்ந்து இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பாடசாலைக் கல்விக்குப் பிறகு உயர்கல்விக்காக விளையாட்டுத் துறையில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் சர்வதேசப் போட்டிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 

அத்துடன், விளையாட்டுப் போட்டிகளுக்கான விண்ணப்பங்களின்போது கணினித் தரவு முறைமை ஊடாக விண்ணப்பிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

பாடசாலை விளையாட்டுத்துறை சார்ந்த பிரச்சினைகள் குறித்து பிரதமர் விஷேட கவனம் கல்வி அமைச்சு மற்றும் விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள், பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேற்று பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.இதன்போது, விளையாட்டுத்துறை சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கல்வி அமைச்சுக்கும் விளையாட்டு அமைச்சுக்கும் இடையில் ஒரு தொடர்பாடலை ஏற்படுத்துவதன் அவசியம் குறித்து இருதரப்பு அதிகாரிகளும் சுட்டிக்காட்டினர். அத்துடன், விளையாட்டுச் சங்கங்களில் நிலவும் அனுமதிப்பத்திரப் பிரச்சினைகள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களால் ஏற்படும் வன்முறைகள், பாடசாலை விளையாட்டுத்துறையை மேம்படுத்துதல் ஆகியன தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.தற்போதைய போட்டி மனப்பான்மைக்கு மாறாக, மாணவர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை முதன்மைப்படுத்தும் விளையாட்டுக் கலாசாரத்தை பாடசாலைகளில் உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், தற்போதைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு கல்வி அமைச்சும் விளையாட்டு அமைச்சும் தொடர்ந்து இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.பாடசாலைக் கல்விக்குப் பிறகு உயர்கல்விக்காக விளையாட்டுத் துறையில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் சர்வதேசப் போட்டிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், விளையாட்டுப் போட்டிகளுக்கான விண்ணப்பங்களின்போது கணினித் தரவு முறைமை ஊடாக விண்ணப்பிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement