• Dec 09 2024

பதுளையில் வாக்குப்பெட்டிகள் கொண்டுசெல்லும் நடவடிக்கை ஆரம்பம் !

Tharmini / Nov 13th 2024, 11:17 am
image

நாளை (14) இடம்பெறவுள்ள பொது தேர்தலை முன்னிட்டு பதுளை மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும்,

பதுளை மத்திய மகா வித்தியாலயம் மற்றும் தர்மதூத சிங்கள மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலிருந்து வாக்குசாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டத்தில் 530 வாக்களிப்பு நிலையங்களில்  705772 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் மஹியாங்கனை, வியழுவ, பசறை, பதுளை, ஹலிஎல, ஊவாபரணகம, வெலிமடை, பண்டாரவளை, ஹப்புத்தனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மேலும், 69 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்களிப்பு நிலையங்களில் அரச அதிகாரிகள் 10000 பேர் கடமையில் ஈடுப்பட்டுள்ளதோடு, பாதுகாப்புக்காக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸாரும் 3000 பேர் கடமையில் ஈடுப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்டத்திற்கான 09 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்ய 15 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 05 சுயேட்சை குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தி 240 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.



பதுளையில் வாக்குப்பெட்டிகள் கொண்டுசெல்லும் நடவடிக்கை ஆரம்பம் நாளை (14) இடம்பெறவுள்ள பொது தேர்தலை முன்னிட்டு பதுளை மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும், பதுளை மத்திய மகா வித்தியாலயம் மற்றும் தர்மதூத சிங்கள மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலிருந்து வாக்குசாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன.பதுளை மாவட்டத்தில் 530 வாக்களிப்பு நிலையங்களில்  705772 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.பதுளை மாவட்டத்தில் மஹியாங்கனை, வியழுவ, பசறை, பதுளை, ஹலிஎல, ஊவாபரணகம, வெலிமடை, பண்டாரவளை, ஹப்புத்தனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மேலும், 69 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.வாக்களிப்பு நிலையங்களில் அரச அதிகாரிகள் 10000 பேர் கடமையில் ஈடுப்பட்டுள்ளதோடு, பாதுகாப்புக்காக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸாரும் 3000 பேர் கடமையில் ஈடுப்பட்டுள்ளனர்.பதுளை மாவட்டத்திற்கான 09 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்ய 15 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 05 சுயேட்சை குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தி 240 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

Advertisement

Advertisement

Advertisement