• Jan 31 2025

மஹிந்த ஆட்சிக்காலத்தில் பல கோடி ரூபாய் நிதியில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம் இன்று வரை பூர்த்தி செய்யப்படவில்லை - கந்தளாய் மக்கள் விசனம்

Chithra / Jan 30th 2025, 9:35 am
image

  

கந்தளாய் பிரதேசத்தில், மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்கும் நோக்கில், 2010 ஆண்டு பல கோடி ரூபாய் அரச நிதியில், ஆரம்பிக்கப்பட்ட வேலை திட்டம் இன்று வரை பூர்த்தி செய்யப்படவில்லை என பிரதேச வாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் பிரதேச சபையின் வான்எல பகுதிக்குட்பட்ட, பன்சல்கொடெல்ல கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் குடிநீர் விநியோகத்துக்கான குடிநீர் குழாய் பொருத்தும் நடவடிக்கை சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் முன்னெடுக்கப்பட்டது.

ஜெயந்திபுர, பன்சல்கொடெல்ல, சூரியபுர ஆகிய பகுதிகளை இணைத்து, குடிநீர் வழங்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் அப்போது மேற்கொள்ளப்பட்டன.

எனினும் இன்று வரை அந்த மக்களுக்கு குடிநீர் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. அத்தோடு, அந்தத் திட்டம் இடை நடுவில் கைவிடப்பட்ட நிலையில் உள்ளதை தற்போது அவதானிக்க முடிகின்றது.

இக்குடிநீர் திட்டத்துக்காக பல கோடி அரசு நிதி செலவு செய்து ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் ஆரம்பிக்கப்பட்டதாகவும், எனினும் தற்போது துருப்பிடித்து அழிந்த நிலையில் காணப்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இங்கு நிர்மாணிக்கப்பட்டு இடை நடுவில் கைவிடப்பட்ட நீர் தாங்கி, எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய ஆபத்தில் இருப்பதாகவும், அங்கு நிர்மாணிக்கப்பட்ட இரண்டு பாதுகாப்பு அறைகளும் அழிந்த நிலையில் காணப்படுவதாகவும், அதுவும் இடிந்து விழக்கூடிய ஆபத்தில் இருப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

துருப்பிடித்த நிலையில் உள்ள கம்பிகளும், அங்குள்ள ஏனைய பொருட்களும் திருடப்பட்டு வருவதாகவும் பிரதேசவாசிகள் மேலும் தெரிவிக்கின்றனர.

இக்குடிநீர் திட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேயினால் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஆரம்பிக்கப் பட்டதாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்

மஹிந்த ஆட்சிக்காலத்தில் பல கோடி ரூபாய் நிதியில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம் இன்று வரை பூர்த்தி செய்யப்படவில்லை - கந்தளாய் மக்கள் விசனம்   கந்தளாய் பிரதேசத்தில், மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்கும் நோக்கில், 2010 ஆண்டு பல கோடி ரூபாய் அரச நிதியில், ஆரம்பிக்கப்பட்ட வேலை திட்டம் இன்று வரை பூர்த்தி செய்யப்படவில்லை என பிரதேச வாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.கந்தளாய் பிரதேச சபையின் வான்எல பகுதிக்குட்பட்ட, பன்சல்கொடெல்ல கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் குடிநீர் விநியோகத்துக்கான குடிநீர் குழாய் பொருத்தும் நடவடிக்கை சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் முன்னெடுக்கப்பட்டது.ஜெயந்திபுர, பன்சல்கொடெல்ல, சூரியபுர ஆகிய பகுதிகளை இணைத்து, குடிநீர் வழங்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் அப்போது மேற்கொள்ளப்பட்டன.எனினும் இன்று வரை அந்த மக்களுக்கு குடிநீர் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. அத்தோடு, அந்தத் திட்டம் இடை நடுவில் கைவிடப்பட்ட நிலையில் உள்ளதை தற்போது அவதானிக்க முடிகின்றது.இக்குடிநீர் திட்டத்துக்காக பல கோடி அரசு நிதி செலவு செய்து ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் ஆரம்பிக்கப்பட்டதாகவும், எனினும் தற்போது துருப்பிடித்து அழிந்த நிலையில் காணப்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.இங்கு நிர்மாணிக்கப்பட்டு இடை நடுவில் கைவிடப்பட்ட நீர் தாங்கி, எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய ஆபத்தில் இருப்பதாகவும், அங்கு நிர்மாணிக்கப்பட்ட இரண்டு பாதுகாப்பு அறைகளும் அழிந்த நிலையில் காணப்படுவதாகவும், அதுவும் இடிந்து விழக்கூடிய ஆபத்தில் இருப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.துருப்பிடித்த நிலையில் உள்ள கம்பிகளும், அங்குள்ள ஏனைய பொருட்களும் திருடப்பட்டு வருவதாகவும் பிரதேசவாசிகள் மேலும் தெரிவிக்கின்றனர.இக்குடிநீர் திட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேயினால் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஆரம்பிக்கப் பட்டதாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்

Advertisement

Advertisement

Advertisement