அஞ்சல் திணைக்களத்தைச் சேர்ந்த அரச அதிகாரிகளின் அசமந்த போக்கினால் பொது மக்கள் தமது அடிப்படை தேவைகளை முக்கிய விடயங்களை செய்து கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மஸ்கெலியா தபாலகத்தில் இருந்து கொழும்பு நோக்கி அனுப்பப்படும் பதிவு தபால்கள் மற்றும் அதிவேக தபால்கள் உரிய நேரத்தில் கிடைக்காமல் கால தாமதமாகி கிடைக்கப் பெறுவதால் தங்கள் முக்கிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 27 ஆம் திகதியன்று மஸ்கெலியா தபால் நிலையத்தில் இருந்து கட்டுநாயக்காவிற்கு (வாகன சான்றிதழ் மட்டும் காப்புறுதி ) போன்ற பாதுகாப்பான ஆவணங்களை பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் குறித்த திகதியில் கிடைக்க பெறாமல் அவதியுற்று தபால் நிலையத்தில் பலமுறை கேட்டபோதும் குறித்த தபால் நிலையத்தை வந்தடையவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் குறித்த ஆவணம் ஏழு நாட்கள் கடந்த நிலையில் (3) பிற்பகல் கிடைக்க பெற்றதாகவும் இதற்கு முன்னரும் இரண்டு தடவைகள் அதிவேக தபால் சேவை மூலம் அனுப்ப பட்ட முக்கிய ஆவணம் ஆறு நாட்களின் பின்னரே கிடைக்க பெற்றதாகவும் இரண்டு நாட்களில் கிடைக்க வேண்டிய குறித்த தபால்கள் இவ்வாறு கால தாமதம் ஆகிறபடியால் தமது அன்றாட முக்கிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாதுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட நபர் கருத்து தெரிவித்துள்ளார்.
எனவே இவ்வாறான செயல்கள் குறித்த பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்த முன் வர வேண்டும் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.
அஞ்சல் திணைக்கள அதிகாரிகளின் அசமந்த போக்கினால் அவதியுறும் பொதுமக்கள். அஞ்சல் திணைக்களத்தைச் சேர்ந்த அரச அதிகாரிகளின் அசமந்த போக்கினால் பொது மக்கள் தமது அடிப்படை தேவைகளை முக்கிய விடயங்களை செய்து கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.மஸ்கெலியா தபாலகத்தில் இருந்து கொழும்பு நோக்கி அனுப்பப்படும் பதிவு தபால்கள் மற்றும் அதிவேக தபால்கள் உரிய நேரத்தில் கிடைக்காமல் கால தாமதமாகி கிடைக்கப் பெறுவதால் தங்கள் முக்கிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இது குறித்து பாதிக்கப்பட்ட ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,கடந்த 27 ஆம் திகதியன்று மஸ்கெலியா தபால் நிலையத்தில் இருந்து கட்டுநாயக்காவிற்கு (வாகன சான்றிதழ் மட்டும் காப்புறுதி ) போன்ற பாதுகாப்பான ஆவணங்களை பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் குறித்த திகதியில் கிடைக்க பெறாமல் அவதியுற்று தபால் நிலையத்தில் பலமுறை கேட்டபோதும் குறித்த தபால் நிலையத்தை வந்தடையவில்லை என்று கூறப்பட்டுள்ளது.மேலும் குறித்த ஆவணம் ஏழு நாட்கள் கடந்த நிலையில் (3) பிற்பகல் கிடைக்க பெற்றதாகவும் இதற்கு முன்னரும் இரண்டு தடவைகள் அதிவேக தபால் சேவை மூலம் அனுப்ப பட்ட முக்கிய ஆவணம் ஆறு நாட்களின் பின்னரே கிடைக்க பெற்றதாகவும் இரண்டு நாட்களில் கிடைக்க வேண்டிய குறித்த தபால்கள் இவ்வாறு கால தாமதம் ஆகிறபடியால் தமது அன்றாட முக்கிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாதுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட நபர் கருத்து தெரிவித்துள்ளார்.எனவே இவ்வாறான செயல்கள் குறித்த பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்த முன் வர வேண்டும் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.