• Dec 23 2024

புதுவருடத்தில் டிஜிட்டல் மயமாகும் பொதுத்துறை! பிரதி அமைச்சர் அறிவிப்பு

Chithra / Dec 23rd 2024, 12:49 pm
image


எதிர்வரும் வருடத்தில் இலங்கையின் பொதுத்துறையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் ஆரம்பிக்கப்படும் என இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார்.

கொழும்பு தேசிய நூலகம் மற்றும் ஆவணச் சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

அத்துடன், நாட்டில் பாரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக  பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

அடுத்த வருடத்தில் இருந்து எமது நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதற்கு தயாராகி வருகின்றோம், 

மேலும் 'க்ளீனிங் ஸ்ரீ லங்கா' என்ற திட்டத்தை ஆரம்பிக்க தயாராகி வருகின்றோம் என்று அவர் குறிப்பிட்டார்.

புதுவருடத்தில் டிஜிட்டல் மயமாகும் பொதுத்துறை பிரதி அமைச்சர் அறிவிப்பு எதிர்வரும் வருடத்தில் இலங்கையின் பொதுத்துறையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் ஆரம்பிக்கப்படும் என இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார்.கொழும்பு தேசிய நூலகம் மற்றும் ஆவணச் சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.அத்துடன், நாட்டில் பாரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக  பிரதி அமைச்சர் தெரிவித்தார்.அடுத்த வருடத்தில் இருந்து எமது நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதற்கு தயாராகி வருகின்றோம், மேலும் 'க்ளீனிங் ஸ்ரீ லங்கா' என்ற திட்டத்தை ஆரம்பிக்க தயாராகி வருகின்றோம் என்று அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement