• Nov 25 2024

ஆசிரியர் ஆட்ச்சேர்ப்பு தொடர்பில் அரச சேவை ஆணைக்குழுவே முடிவெடுக்கும் - கல்வியமைச்சர் தெரிவிப்பு...!

Anaath / Jun 19th 2024, 7:46 pm
image

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பிரச்சினை தொடர்பில் மாற்று நடவடிக்கை ஒன்றினை அடுத்த இரு கிழமைக்குள்  எடுப்பதற்கு தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுஷில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.

இன்று இடம் பெற்றுள்ள பாராளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சி தலைவர்  அரச பட்டதாரிகள் தொடர்பில் கேட்டுள்ள கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர்  இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2019 ஆம் ஆண்டு தொழிலில்லா  பட்டதாரிகள் என்கின்ற குழுவை சார்ந்த 52000 பேரை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக அரச  உத்தியோகத்தில் இணைத்து கொள்ளப்பட்டது. அவ்வாறாக இணைத்து கொள்ளப்பட்டபோது அன்று சிலர் சொன்ன விடயம் என்னவென்றால் ஒருபோதும் இந்த  நியமனங்கள் வாங்கப்பட மாட்டாது என்று சொன்னார்கள். அப்போது இருந்த அரசாங்கத்தின் பின்வரும் அரசாங்கமாகத்தான் இந்த அரசாங்கம் இந்த விடயங்களை கொண்டு சொல்கிறது. ஆனால் அனைவருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டது. அவர்கள் பட்டதாரிகளுக்கான அடிப்படை சம்பளத்தை பெற்றுக்கொள்கிறார்கள். இவர்களில் 23000 பேர் அரச பாடசாலைகள், தேசிய பாடசாலைகளிலும்   மாகாண பாடசாலைகளில் அதிகமான எண்ணிக்கையும் ஆசிரியர்களாக பயிற்சி பெற அனுப்பப்பட்டார்கள். ஆனால் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என்ற பெயரின் கீழ்  தான் அவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது. 

நான் அந்த அமைச்சினை  பொறுப்பேற்ற பின்பு 3 வருடங்களுக்கு பிறகு  பயிலுனர் நியமனம் ஒன்று வழங்கி ஆசிரியர் பிரமானக்கோப்புக்கு அமைய  ஆட்ச்சேரப்பு செய்வதற்கு தான் நாங்கள் எதிர்பார்த்தோம். நூற்றுக்கு நூறு வீதம் சித்தியடைவார்கள் என்று எனக்கு தெரியாது. சித்தியடையாவிட்டால் என்ன செய்வது என்ற பிரச்சனைதான் ஏற்பட்டது. 

ஆசிரியர் ஆட்சேர்ப்பு எவ்வாறு எவ்வாறு இடம் பெறுகிறது என்றால் 35 வயதுக்கு குறைந்தவர்களுக்கு ஒரு பரீட்சை நடைபெறுகின்றது. விஞ்ஞான படத்துக்கான ஆட்ச்சேர்ப்பு என்றால்  விஞ்ஞான படத்துக்கான ஆசிரியர் ஆட்சேர்ப்பு என்று நாங்கள் புறம்பாக கூறினோம். இவ்வாறு புறம்பாக தனித்தனியாக பரீட்ச்சை நடத்தப்படுவதில்லை. எல்லோருக்கும் பொதுவான ஒரு பரீட்ச்சை  தான் நடத்தப்பட்டது. அரச சேவை ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி இந்த அனைவருக்கும் இந்த பட்டதாரிகளின் சிலர் ஆசிரியர் பயிலுனர்களாக அரச நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள்.  அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் திகதி பரீட்சை நடத்தப்படவிருந்தது. இதில் 4 குழுக்கள் நீதிமன்றத்துக்கு சென்று வழக்கு தொடுத்திருக்கின்றார்கள். 40 வயது என்பது 45 வயதாக உயர்த்த வேண்டும் என்பது முதலாவது விடயம்.  அதே போல பரீட்சைக்கு தோற்ற தேவையில்லை. பயிற்சி பெறுகின்ற காரணத்தினாலே  நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என்று சொன்னார்கள். ஆகவே அப்படி ஒரு முடிவுக்கு வந்தால் அமைச்சரவை திருத்தத்தில் உள்ள விடயமும் அதேபோல ஆசிரியர் பிரமணக்குறிப்புகளும் மீறப்பட்டதாக இருக்கும். அரச சேவை ஆணைக்குழுதான் ஈற்றில்  இது சம்பந்தமான இறுதி தீர்மானம் எடுக்கும். இது இப்பொழுது ஒரு வருடத்திற்கு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

இதற்கிடையில் 23000 பேரில் 6000 பேர் மாகாண மட்டத்தில் இடபெற்ற போட்டிகளுக்கு முகம் கொடுத்து நியமனம் பெற்றிருக்கிறார்கள் அண்ணளவாக 23000 பேரில் 6000பேர்  குறைவாக இருக்கின்றார்கள். வேறு வேறு தொழிலுக்கும் சென்றிருக்கிறார்கள். ஆகவே இங்கு 16000 பேர் இங்கு இருக்கின்றார்கள். 

ஆகவே இந்த பிரச்சினை தீர்க்க வேண்டும் என்பதற்காக ஓர் அரசாங்கம் என்ற ரீதியில் ஒரு மாற்று நடைமுறை ஒன்றினை அடுத்த இரண்டு மூன்று கிழமைகளுக்குள் மேற்கொள்ள இருக்கின்றோம். என அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் ஆட்ச்சேர்ப்பு தொடர்பில் அரச சேவை ஆணைக்குழுவே முடிவெடுக்கும் - கல்வியமைச்சர் தெரிவிப்பு. அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பிரச்சினை தொடர்பில் மாற்று நடவடிக்கை ஒன்றினை அடுத்த இரு கிழமைக்குள்  எடுப்பதற்கு தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுஷில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.இன்று இடம் பெற்றுள்ள பாராளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சி தலைவர்  அரச பட்டதாரிகள் தொடர்பில் கேட்டுள்ள கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர்  இதனை தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2019 ஆம் ஆண்டு தொழிலில்லா  பட்டதாரிகள் என்கின்ற குழுவை சார்ந்த 52000 பேரை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக அரச  உத்தியோகத்தில் இணைத்து கொள்ளப்பட்டது. அவ்வாறாக இணைத்து கொள்ளப்பட்டபோது அன்று சிலர் சொன்ன விடயம் என்னவென்றால் ஒருபோதும் இந்த  நியமனங்கள் வாங்கப்பட மாட்டாது என்று சொன்னார்கள். அப்போது இருந்த அரசாங்கத்தின் பின்வரும் அரசாங்கமாகத்தான் இந்த அரசாங்கம் இந்த விடயங்களை கொண்டு சொல்கிறது. ஆனால் அனைவருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டது. அவர்கள் பட்டதாரிகளுக்கான அடிப்படை சம்பளத்தை பெற்றுக்கொள்கிறார்கள். இவர்களில் 23000 பேர் அரச பாடசாலைகள், தேசிய பாடசாலைகளிலும்   மாகாண பாடசாலைகளில் அதிகமான எண்ணிக்கையும் ஆசிரியர்களாக பயிற்சி பெற அனுப்பப்பட்டார்கள். ஆனால் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என்ற பெயரின் கீழ்  தான் அவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது. நான் அந்த அமைச்சினை  பொறுப்பேற்ற பின்பு 3 வருடங்களுக்கு பிறகு  பயிலுனர் நியமனம் ஒன்று வழங்கி ஆசிரியர் பிரமானக்கோப்புக்கு அமைய  ஆட்ச்சேரப்பு செய்வதற்கு தான் நாங்கள் எதிர்பார்த்தோம். நூற்றுக்கு நூறு வீதம் சித்தியடைவார்கள் என்று எனக்கு தெரியாது. சித்தியடையாவிட்டால் என்ன செய்வது என்ற பிரச்சனைதான் ஏற்பட்டது. ஆசிரியர் ஆட்சேர்ப்பு எவ்வாறு எவ்வாறு இடம் பெறுகிறது என்றால் 35 வயதுக்கு குறைந்தவர்களுக்கு ஒரு பரீட்சை நடைபெறுகின்றது. விஞ்ஞான படத்துக்கான ஆட்ச்சேர்ப்பு என்றால்  விஞ்ஞான படத்துக்கான ஆசிரியர் ஆட்சேர்ப்பு என்று நாங்கள் புறம்பாக கூறினோம். இவ்வாறு புறம்பாக தனித்தனியாக பரீட்ச்சை நடத்தப்படுவதில்லை. எல்லோருக்கும் பொதுவான ஒரு பரீட்ச்சை  தான் நடத்தப்பட்டது. அரச சேவை ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி இந்த அனைவருக்கும் இந்த பட்டதாரிகளின் சிலர் ஆசிரியர் பயிலுனர்களாக அரச நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள்.  அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.2023 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் திகதி பரீட்சை நடத்தப்படவிருந்தது. இதில் 4 குழுக்கள் நீதிமன்றத்துக்கு சென்று வழக்கு தொடுத்திருக்கின்றார்கள். 40 வயது என்பது 45 வயதாக உயர்த்த வேண்டும் என்பது முதலாவது விடயம்.  அதே போல பரீட்சைக்கு தோற்ற தேவையில்லை. பயிற்சி பெறுகின்ற காரணத்தினாலே  நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என்று சொன்னார்கள். ஆகவே அப்படி ஒரு முடிவுக்கு வந்தால் அமைச்சரவை திருத்தத்தில் உள்ள விடயமும் அதேபோல ஆசிரியர் பிரமணக்குறிப்புகளும் மீறப்பட்டதாக இருக்கும். அரச சேவை ஆணைக்குழுதான் ஈற்றில்  இது சம்பந்தமான இறுதி தீர்மானம் எடுக்கும். இது இப்பொழுது ஒரு வருடத்திற்கு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.இதற்கிடையில் 23000 பேரில் 6000 பேர் மாகாண மட்டத்தில் இடபெற்ற போட்டிகளுக்கு முகம் கொடுத்து நியமனம் பெற்றிருக்கிறார்கள் அண்ணளவாக 23000 பேரில் 6000பேர்  குறைவாக இருக்கின்றார்கள். வேறு வேறு தொழிலுக்கும் சென்றிருக்கிறார்கள். ஆகவே இங்கு 16000 பேர் இங்கு இருக்கின்றார்கள். ஆகவே இந்த பிரச்சினை தீர்க்க வேண்டும் என்பதற்காக ஓர் அரசாங்கம் என்ற ரீதியில் ஒரு மாற்று நடைமுறை ஒன்றினை அடுத்த இரண்டு மூன்று கிழமைகளுக்குள் மேற்கொள்ள இருக்கின்றோம். என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement