• Nov 25 2024

அநுரவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளமைக்கு எதிர்க்கட்சிகளின் பலவீனமே காரணம்! அமைச்சர் ஹரின்

Chithra / Mar 14th 2024, 3:51 pm
image

 

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு அதிகரித்துள்ளமைக்கு நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகளின் பலவீனமே காரணம் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதான எதிர்க்கட்சியினர் ஆட்சி பொறுப்பேற்க தயாராக இருக்க வேண்டும். ஆனால் பிரதான எதிர்க்கட்சியின் செயல்திறன் குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவியது.

எனவேதான் மூன்றாவது கட்சியின் தோற்றம் நாட்டில் இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதனால், ஆளுங்கட்சியுடன் ஒத்துழைக்க வேண்டிய தேவை பிரதான எதிர்க்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. 

அதிகம் யோசிக்காமல் பிரதான எதிர்க்கட்சி அரசாங்கத்துடன் ஒன்றுபட வேண்டும்.

பிரதான எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் அரசாங்கத்தில் சேர விரும்பலாம். அதற்குள் அனைத்தும் சரியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் நடந்து வரும் தவறான புரிதல் இரு கட்சிகளின் தலைவர்களாலும் தீர்க்கப்பட வேண்டும், அதற்கான நேரம் இது.  என அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

அநுரவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளமைக்கு எதிர்க்கட்சிகளின் பலவீனமே காரணம் அமைச்சர் ஹரின்  அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு அதிகரித்துள்ளமைக்கு நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகளின் பலவீனமே காரணம் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.பிரதான எதிர்க்கட்சியினர் ஆட்சி பொறுப்பேற்க தயாராக இருக்க வேண்டும். ஆனால் பிரதான எதிர்க்கட்சியின் செயல்திறன் குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவியது.எனவேதான் மூன்றாவது கட்சியின் தோற்றம் நாட்டில் இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளது.இதனால், ஆளுங்கட்சியுடன் ஒத்துழைக்க வேண்டிய தேவை பிரதான எதிர்க்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. அதிகம் யோசிக்காமல் பிரதான எதிர்க்கட்சி அரசாங்கத்துடன் ஒன்றுபட வேண்டும்.பிரதான எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் அரசாங்கத்தில் சேர விரும்பலாம். அதற்குள் அனைத்தும் சரியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஐக்கிய தேசியக் கட்சிக்கும் மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் நடந்து வரும் தவறான புரிதல் இரு கட்சிகளின் தலைவர்களாலும் தீர்க்கப்பட வேண்டும், அதற்கான நேரம் இது.  என அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement