• Sep 20 2024

நாட்டில் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும் - நீதி அமைச்சர் விஜேதாச தெரிவிப்பு! samugammedia

Tamil nila / May 14th 2023, 10:13 pm
image

Advertisement

நாடு ஒன்று முன்னேறுவதாக இருந்தால் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் உலகில் முன்னேற்றமடைந்திருக்கும் நாடுகளில் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

நீதி அமைச்சு சரியான முறையில் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள இன்னும் ஒருவருடம் வரை செல்லும் எனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதுதொடர்பில்  நீதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 

நாடு ஒன்று முன்னேறுவதாக இருந்தால், அந்த நாட்டின் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்படவேண்டும். உதாரணமாக சிங்கப்பூர் ஒரு காலத்தில் எம்மைவிட மிக மோசமான நிலையிலேயே இருந்தது. நாங்கள் கடந்த காலத்தில் எதிர்கொண்டிருந்த வரிசை யுகத்தைவிட மோசமான நிலையே அங்கு இருந்தது வந்தது.

ஆனால் இன்று அதற்கு மாற்றமான நிலையே காண்கிறாேம். டொலர் மில்லியன் கணக்கில் கையில் வைத்துக்கொண்டு பெண் பிள்ளை ஒருவருக்கு தனியாக வீதியில் சென்று வர முடியும். பயப்பட தேவையில்லை. அந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட்டிருப்பதே இதற்கு காரணமாகும்.

அதேநேரம் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்படாததால், தங்கம், வெண்கலம் இருக்கும் தென் ஆபிரிக்க நாடுகள் இன்னும் முன்னேற்றம் இல்லாமல் இருக்கின்றன.அந்த நாடுகளின் பெரும்பாலானவர்கள் வறுமை நிலையிலேயே இருக்கின்றனர்.

ஆனால் எமது நாட்டில் அனைத்து வளங்களும் இருக்கின்றன. எமக்கு இருக்கும் வளங்கள் இந்தியாவில் கூட இல்லை. என்றாலும் நாங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இன்னும் இல்லை. ஏதோ ஒரு இடத்தில் எமக்கு தவறி இருக்கிறது. அதனை நாங்கள் சரி செய்துகொண்டால் எமக்கும் சிங்கப்பூர் போன்ற நாடுகளின் நிலைக்கு வரமுடியும். அதற்காக எமது அமைச்சுக்களின் செயற்திறமையை அதிகரிக்க வேண்டும். சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நாட்டில் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும் - நீதி அமைச்சர் விஜேதாச தெரிவிப்பு samugammedia நாடு ஒன்று முன்னேறுவதாக இருந்தால் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் உலகில் முன்னேற்றமடைந்திருக்கும் நாடுகளில் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.நீதி அமைச்சு சரியான முறையில் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள இன்னும் ஒருவருடம் வரை செல்லும் எனவும் அவர் தெரிவித்தார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதுதொடர்பில்  நீதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், நாடு ஒன்று முன்னேறுவதாக இருந்தால், அந்த நாட்டின் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்படவேண்டும். உதாரணமாக சிங்கப்பூர் ஒரு காலத்தில் எம்மைவிட மிக மோசமான நிலையிலேயே இருந்தது. நாங்கள் கடந்த காலத்தில் எதிர்கொண்டிருந்த வரிசை யுகத்தைவிட மோசமான நிலையே அங்கு இருந்தது வந்தது.ஆனால் இன்று அதற்கு மாற்றமான நிலையே காண்கிறாேம். டொலர் மில்லியன் கணக்கில் கையில் வைத்துக்கொண்டு பெண் பிள்ளை ஒருவருக்கு தனியாக வீதியில் சென்று வர முடியும். பயப்பட தேவையில்லை. அந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட்டிருப்பதே இதற்கு காரணமாகும்.அதேநேரம் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்படாததால், தங்கம், வெண்கலம் இருக்கும் தென் ஆபிரிக்க நாடுகள் இன்னும் முன்னேற்றம் இல்லாமல் இருக்கின்றன.அந்த நாடுகளின் பெரும்பாலானவர்கள் வறுமை நிலையிலேயே இருக்கின்றனர்.ஆனால் எமது நாட்டில் அனைத்து வளங்களும் இருக்கின்றன. எமக்கு இருக்கும் வளங்கள் இந்தியாவில் கூட இல்லை. என்றாலும் நாங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இன்னும் இல்லை. ஏதோ ஒரு இடத்தில் எமக்கு தவறி இருக்கிறது. அதனை நாங்கள் சரி செய்துகொண்டால் எமக்கும் சிங்கப்பூர் போன்ற நாடுகளின் நிலைக்கு வரமுடியும். அதற்காக எமது அமைச்சுக்களின் செயற்திறமையை அதிகரிக்க வேண்டும். சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement