• Sep 20 2024

ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் மக்களை குழப்புகின்றனர் - சுரேஸ் - இரண்டும் கெட்டான் நிலையில் மக்கள்! SamugamMedia

Tamil nila / Feb 16th 2023, 6:06 pm
image

Advertisement

உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கும் தமக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பது போன்று அரசாங்கமும் ஜனாதிபதியும் நடந்து கொள்வது கேவலத்திலும் கேவலம் என ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணத்தில் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது எழுப்பபட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.


திறைசேரியிடம் நிதியில்லை என்பதையே தொடர்ந்து கூறிவருவதாகவும் அதனை நிர்வகிப்பதற்கான எந்த நடவடிக்கையினையும் அரசாங்கம் இதுவரை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


தேர்தலை உண்மையாகவே நடத்துவது இல்லை என்ற நோக்கத்தில் அரசாங்கம் இருந்தால் அதையாவது திட்டவட்டமாக அறிவிக்கவேண்டும் .


என்றும் மாறாக மக்களையும் வேட்பாளர்களையும் குழப்பும் நடவடிக்கைகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.


குறிப்பாக எதிர்கட்சியில் உள்ளவர்கள் தேர்தலை வைக்கவேண்டும் என வெறுமனே கருத்தினை கூறாமல் திட்டவட்டமான பதில்களை அரசாங்கத்திடம் பெற்று, மக்களுக்கு அறிவிக்கவேண்டும் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.


எதிர்கட்சிகள் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்தாலும் இறுதி நேரம் வரை தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் உள்ளதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.


மக்களை இரண்டும் கெட்டான் நிலைக்கு கொண்டு செல்லவேண்டாம் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் எச்சரித்துள்ளார்.

ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் மக்களை குழப்புகின்றனர் - சுரேஸ் - இரண்டும் கெட்டான் நிலையில் மக்கள் SamugamMedia உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கும் தமக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பது போன்று அரசாங்கமும் ஜனாதிபதியும் நடந்து கொள்வது கேவலத்திலும் கேவலம் என ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது எழுப்பபட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.திறைசேரியிடம் நிதியில்லை என்பதையே தொடர்ந்து கூறிவருவதாகவும் அதனை நிர்வகிப்பதற்கான எந்த நடவடிக்கையினையும் அரசாங்கம் இதுவரை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.தேர்தலை உண்மையாகவே நடத்துவது இல்லை என்ற நோக்கத்தில் அரசாங்கம் இருந்தால் அதையாவது திட்டவட்டமாக அறிவிக்கவேண்டும் .என்றும் மாறாக மக்களையும் வேட்பாளர்களையும் குழப்பும் நடவடிக்கைகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.குறிப்பாக எதிர்கட்சியில் உள்ளவர்கள் தேர்தலை வைக்கவேண்டும் என வெறுமனே கருத்தினை கூறாமல் திட்டவட்டமான பதில்களை அரசாங்கத்திடம் பெற்று, மக்களுக்கு அறிவிக்கவேண்டும் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.எதிர்கட்சிகள் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்தாலும் இறுதி நேரம் வரை தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் உள்ளதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.மக்களை இரண்டும் கெட்டான் நிலைக்கு கொண்டு செல்லவேண்டாம் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் எச்சரித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement