சிலாபம், அம்பகந்தவில புனித ரோகஸ் கனிஷ்ட வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட தற்காலிக சுவர் இன்று (12) பிற்பகல் இடிந்து வீழ்ந்ததில் இரு மாணவர்கள் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் பாடசாலையின் 11ஆம் தரம் மற்றும் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவரே காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இரண்டு மாணவர்களும் சிகிச்சைக்காக சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் ஒருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார் எனவும், மற்றைய மாணவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு இடையில் உள்ள இடத்தை மூடுவதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட மதில் ஒன்று இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளது.
அந்த சுவருடன் இணைக்கப்பட்டிருந்த ஒரு கேட்டை மூடுவதற்கு முயற்சித்த போது, அது இவ்வாறு இடிந்து விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாடசாலை கேட்டை மூடச் சென்ற மாணவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.samugammedia சிலாபம், அம்பகந்தவில புனித ரோகஸ் கனிஷ்ட வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட தற்காலிக சுவர் இன்று (12) பிற்பகல் இடிந்து வீழ்ந்ததில் இரு மாணவர்கள் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.இந்த விபத்தில் பாடசாலையின் 11ஆம் தரம் மற்றும் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவரே காயமடைந்துள்ளனர்.காயமடைந்த இரண்டு மாணவர்களும் சிகிச்சைக்காக சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் ஒருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார் எனவும், மற்றைய மாணவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு இடையில் உள்ள இடத்தை மூடுவதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட மதில் ஒன்று இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளது.அந்த சுவருடன் இணைக்கப்பட்டிருந்த ஒரு கேட்டை மூடுவதற்கு முயற்சித்த போது, அது இவ்வாறு இடிந்து விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.