• May 07 2024

பிரபாகரனை எதிர்கொள்ள தயங்கிய சிங்கள தலைமைகள்...!நாமே துணிச்சலாக எதிர்கொண்டோம்...! பெரமுன மாநாட்டில் மஹிந்த பெருமிதம்...!samugammedia

Sharmi / Dec 16th 2023, 2:23 pm
image

Advertisement

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நேருக்கு நேர் எதிர்கொள்ள எந்தவொரு முன்னாள் தலைவரும் முன்வரவில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையை கடந்த 2005 ஆம் ஆண்டு நான் ஏற்றுக் கொள்ளும் போதும் எமது கட்சி மீது பலர் சேறு பூசினார்கள்.எனினும், நாடு இரண்டாக பிளவுபடுவதை தடுக்குமாறு மாத்திரமே அன்று மக்கள் எம்மிடம் கோரினார்கள்.

30 வருட யுத்தத்தில், தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை எந்தவொரு தலைவராலும் எதிர்கொள்ள முடியவில்லை.சில தலைவர்கள் யுத்தத்தை நிறுத்துமாறு கோரி பிரபாகரனுக்கு ஆயுதங்களையும் வழங்கினார்கள்.அந்த தலைவர் யாரென நான் கூற மாட்டேன்.இவ்வாறான யுத்தத்தை சிறிலங்காவின் மற்றுமொரு தலைவர் எதிர்நோக்கும் நிலையை நாம் உருவாக்கவில்லை.

சிங்கள, தமிழ், முஸ்லீம் உள்ளிட்ட அனைத்து மக்களும் சமாதானமாக வாழக்கூடிய நிலையை நாம் ஏற்படுத்தினோம்.

எம்மை குற்றவாளிகளாக வெளிக்காட்டும் முயற்சிகளில் பலர் ஈடுபடுகிறார்கள்.இலங்கை நாட்டை யாருடைய சொந்த தேவைக்காகவும் பிளவுபட நாம் இடமளிக்க மாட்டோம்.

அனைத்து சவால்களையும் எதிர்நோக்கக்கூடிய ஒரே நாடு இலங்கை என்பதை சொல்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

எமக்குள்ள மக்கள் ஆணையுடன் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் நாம் பங்கெடுப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.

பிரபாகரனை எதிர்கொள்ள தயங்கிய சிங்கள தலைமைகள்.நாமே துணிச்சலாக எதிர்கொண்டோம். பெரமுன மாநாட்டில் மஹிந்த பெருமிதம்.samugammedia விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நேருக்கு நேர் எதிர்கொள்ள எந்தவொரு முன்னாள் தலைவரும் முன்வரவில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,இலங்கையை கடந்த 2005 ஆம் ஆண்டு நான் ஏற்றுக் கொள்ளும் போதும் எமது கட்சி மீது பலர் சேறு பூசினார்கள்.எனினும், நாடு இரண்டாக பிளவுபடுவதை தடுக்குமாறு மாத்திரமே அன்று மக்கள் எம்மிடம் கோரினார்கள்.30 வருட யுத்தத்தில், தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை எந்தவொரு தலைவராலும் எதிர்கொள்ள முடியவில்லை.சில தலைவர்கள் யுத்தத்தை நிறுத்துமாறு கோரி பிரபாகரனுக்கு ஆயுதங்களையும் வழங்கினார்கள்.அந்த தலைவர் யாரென நான் கூற மாட்டேன்.இவ்வாறான யுத்தத்தை சிறிலங்காவின் மற்றுமொரு தலைவர் எதிர்நோக்கும் நிலையை நாம் உருவாக்கவில்லை.சிங்கள, தமிழ், முஸ்லீம் உள்ளிட்ட அனைத்து மக்களும் சமாதானமாக வாழக்கூடிய நிலையை நாம் ஏற்படுத்தினோம்.எம்மை குற்றவாளிகளாக வெளிக்காட்டும் முயற்சிகளில் பலர் ஈடுபடுகிறார்கள்.இலங்கை நாட்டை யாருடைய சொந்த தேவைக்காகவும் பிளவுபட நாம் இடமளிக்க மாட்டோம்.அனைத்து சவால்களையும் எதிர்நோக்கக்கூடிய ஒரே நாடு இலங்கை என்பதை சொல்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.எமக்குள்ள மக்கள் ஆணையுடன் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் நாம் பங்கெடுப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement