• May 19 2024

முல்லைத்தீவில் பாரிய வெள்ளம் - கட்டுப்பாட்டை மீறி பாயும் முத்துஐயன்கட்டுக்குளம்...!samugammedia

Anaath / Dec 16th 2023, 2:02 pm
image

Advertisement

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய வெல்ல அனர்த்தம் நிகழ்ந்துள்ள நிலையில் பாரிய நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான முத்துஐயன்கட்டுக்குளத்தின் நான்கு வான் கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

குறித்த குறித்த குளத்தின்  நீர்வரத்து அதிகரித்திருக்கின்ற நிலையிலேயே குளத்தின் நான்கு நான் கதவுகள்  இன்று (16) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன்  மக்களை மிகுந்த அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

24 அடி கொள்ளளவு கொண்ட முத்துஐயன்கட்டுக்குளத்தில் 23 அடி 3  அங்குல நீர்மட்டம் காணப்படுகிறது. நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் இரண்டு வான் கதவுகள் ஆறு  அங்குலத்துக்கும்  இரண்டு வான் கதவுகள் மூன்று அங்குலத்துக்கும் திறந்து விடப்பட்டுள்ளன

இன்று காலை முத்துஐயன்கட்டு நீர்ப்பாசன பொறியியலாளர் திருமதி மஞ்சுளா ஜொய்ஸ்குமார் அழைப்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அருளம்பலம் உமா மகேஸ்வரன் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திருமதி பரமோதயன் ஜெயராணி மாகாண நீர்ப்பாசன  பணிப்பாளர் பொறியியலாளர் நவரட்ணம் சுதாகரன் ஒட்டுசுட்டான் பிரதேச உதவிப் பிரதேச செயலாளர்இ.றமேஸ் முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு நான்கு  கதவுகளை திறந்து வைத்தனர்

இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 பாரிய மற்றும் நடுத்தர குளங்கள் காணப்படுவதாகவும் அனைத்து குளங்களும் அதன் உச்ச கொள்ளளவை அடைந்துள்ளதாகவும் எனவே தாழ் நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக  இருக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.


முல்லைத்தீவில் பாரிய வெள்ளம் - கட்டுப்பாட்டை மீறி பாயும் முத்துஐயன்கட்டுக்குளம்.samugammedia முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய வெல்ல அனர்த்தம் நிகழ்ந்துள்ள நிலையில் பாரிய நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான முத்துஐயன்கட்டுக்குளத்தின் நான்கு வான் கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த குறித்த குளத்தின்  நீர்வரத்து அதிகரித்திருக்கின்ற நிலையிலேயே குளத்தின் நான்கு நான் கதவுகள்  இன்று (16) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன்  மக்களை மிகுந்த அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 24 அடி கொள்ளளவு கொண்ட முத்துஐயன்கட்டுக்குளத்தில் 23 அடி 3  அங்குல நீர்மட்டம் காணப்படுகிறது. நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் இரண்டு வான் கதவுகள் ஆறு  அங்குலத்துக்கும்  இரண்டு வான் கதவுகள் மூன்று அங்குலத்துக்கும் திறந்து விடப்பட்டுள்ளனஇன்று காலை முத்துஐயன்கட்டு நீர்ப்பாசன பொறியியலாளர் திருமதி மஞ்சுளா ஜொய்ஸ்குமார் அழைப்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அருளம்பலம் உமா மகேஸ்வரன் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திருமதி பரமோதயன் ஜெயராணி மாகாண நீர்ப்பாசன  பணிப்பாளர் பொறியியலாளர் நவரட்ணம் சுதாகரன் ஒட்டுசுட்டான் பிரதேச உதவிப் பிரதேச செயலாளர்இ.றமேஸ் முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு நான்கு  கதவுகளை திறந்து வைத்தனர்இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 பாரிய மற்றும் நடுத்தர குளங்கள் காணப்படுவதாகவும் அனைத்து குளங்களும் அதன் உச்ச கொள்ளளவை அடைந்துள்ளதாகவும் எனவே தாழ் நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக  இருக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement