கல்வியியற் கல்லூரிகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது என பிரதமர் ஹரிணி அமரசூரிய கவலை தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கல்வி மற்றும் உயர்க்கவி அமைச்சு மீதான வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கல்வியமைச்சர் என்ற ரீதியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கல்வியியற் கல்லூரிகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. யாழ்ப்பாணம், பொலநறுவை போன்ற கல்வியியற் கல்லூரிகளை பார்வையிடுவதற்குச் சென்றிருந்தேன். அங்கு இருக்கின்ற மாணவர்கள் எப்போதாவது ஒருநாள் ஆசிரியர்களாக மாற இருக்கிறார்கள்.
அங்கு இருக்கின்ற மாணவர்கள் சரியான வசதிகள் இல்லாமல் இருக்கிறார்கள். சரியான விடுதி வசதி இல்லை. குடிதண்ணீர் வசதி இல்லை. பாடசாலையில் திறன் வகுப்பறைகள் குறித்து கதைக்கின்றோம். ஆனால் அதில் கற்பிக்கப்போகின்ற ஆசிரியர்களுக்கு இன்னமும் கரும்பலகையே காணப்படுகிறது.
சரியான மின்சார வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இது தொடர்பாக இந்த வருடம் கவனம் செலுத்த வேண்டும்.
"அண்மையில் உள்ள பாடசாலை நல்ல பாடசாலை" எனும் கருத்திட்டம் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இன்னமும் மின்சார வசதி இல்லை, மதில்கள் இருக்கிறது; நுழைவாயில், கதவுகள் இல்லை. குறியீட்டு பலகைகள் இல்லை.
இப்படி நிறைய குறைபாடுகள் இருக்கிறது. துப்புரவு வசதிகள் இல்லாத பாடசாலைகள் நாட்டில் பல இருக்கிறது.
ஆகவே எங்களுடைய வரவு செலவு திட்டத்தில் அது தொடர்பாக விசேட கவனம் செலுத்தி பாடசாலைகளில் நிறைவு பெறாமல் இருக்க கூடிய அல்லது பகுதியளவில் நிர்வாகிக்கப்பட்டு கொண்டிருக்கக்கூடிய கட்டிடங்களை, கருத்திட்டங்களை நிறைவு செய்வதற்காக நிதியை நாங்கள் ஒதுக்கி இருக்கிறோம். அதற்காக 11,000 மில்லியனை நாங்கள் ஒதுக்கி இருக்கிறோம் எனத்தெரிவித்தார்.
கல்வியற்கல்லூரிகளின் நிலைமை மோசம்; பிரதமர் அதிரடி நடவடிக்கை கல்வியியற் கல்லூரிகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது என பிரதமர் ஹரிணி அமரசூரிய கவலை தெரிவித்துள்ளார். இன்றைய தினம் கல்வி மற்றும் உயர்க்கவி அமைச்சு மீதான வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கல்வியமைச்சர் என்ற ரீதியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.கல்வியியற் கல்லூரிகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. யாழ்ப்பாணம், பொலநறுவை போன்ற கல்வியியற் கல்லூரிகளை பார்வையிடுவதற்குச் சென்றிருந்தேன். அங்கு இருக்கின்ற மாணவர்கள் எப்போதாவது ஒருநாள் ஆசிரியர்களாக மாற இருக்கிறார்கள். அங்கு இருக்கின்ற மாணவர்கள் சரியான வசதிகள் இல்லாமல் இருக்கிறார்கள். சரியான விடுதி வசதி இல்லை. குடிதண்ணீர் வசதி இல்லை. பாடசாலையில் திறன் வகுப்பறைகள் குறித்து கதைக்கின்றோம். ஆனால் அதில் கற்பிக்கப்போகின்ற ஆசிரியர்களுக்கு இன்னமும் கரும்பலகையே காணப்படுகிறது.சரியான மின்சார வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இது தொடர்பாக இந்த வருடம் கவனம் செலுத்த வேண்டும். "அண்மையில் உள்ள பாடசாலை நல்ல பாடசாலை" எனும் கருத்திட்டம் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இன்னமும் மின்சார வசதி இல்லை, மதில்கள் இருக்கிறது; நுழைவாயில், கதவுகள் இல்லை. குறியீட்டு பலகைகள் இல்லை.இப்படி நிறைய குறைபாடுகள் இருக்கிறது. துப்புரவு வசதிகள் இல்லாத பாடசாலைகள் நாட்டில் பல இருக்கிறது.ஆகவே எங்களுடைய வரவு செலவு திட்டத்தில் அது தொடர்பாக விசேட கவனம் செலுத்தி பாடசாலைகளில் நிறைவு பெறாமல் இருக்க கூடிய அல்லது பகுதியளவில் நிர்வாகிக்கப்பட்டு கொண்டிருக்கக்கூடிய கட்டிடங்களை, கருத்திட்டங்களை நிறைவு செய்வதற்காக நிதியை நாங்கள் ஒதுக்கி இருக்கிறோம். அதற்காக 11,000 மில்லியனை நாங்கள் ஒதுக்கி இருக்கிறோம் எனத்தெரிவித்தார்.