• Mar 10 2025

கிழக்கில் இஸ்லாமிய கடும்போக்கு அமைப்பை வழிநடத்தும் மருத்துவர் - ஞானசார தேரர் பகிரங்கம்

Chithra / Mar 10th 2025, 11:21 am
image

 

கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய கடும்போக்குடைய அமைப்பு ஒன்றை அரச மருத்துவர் ஒருவர் வழிநடத்துவதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்  தெரிவித்துள்ளார். 

யூடியுப் அலைவரிசை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்முனை அரச வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றி வரும் மருத்துவர் ஒருவரே இந்த கடும்போக்குவாத அமைப்பிற்கு தலைமை தாங்குகின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வன்முறைக் குழு, தன் ஆதரவாளர்களுக்கு உலகம் எந்த வேலைக்கும் தகுதியற்றது, குழந்தைகள் கல்வி கற்கக் கூடாது, புத்தகங்களைப் படிக்க வேண்டாம் என போதிக்கின்றது என தெரிவித்துள்ளார்.

மேலும், தங்களது வாழ்வை "தெய்வத்திற்காக" அர்ப்பணிக்க வேண்டும் எனவும் இந்தக் குழுவின் தலைவர் மக்களை வழிநடத்துவதாக தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த அமைப்பின் ஆதரவாளர்கள் தங்களது குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்புவதில்லை என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

இவரது கருத்துக்கள் பல்லின மக்கள் வாழும் இந்நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்ற நிலையில் இனங்களுக்கு இடையில் விரிசலையும் ஏற்படுத்துவதாக சமூக ஆரவலர்கள் விமர்சிக்கின்றனர். இந்நிலையில் இது குறித்து அரசு மௌனம் காப்பது இனங்களுக்கு இடையிலான விரிசலை மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.

கிழக்கில் இஸ்லாமிய கடும்போக்கு அமைப்பை வழிநடத்தும் மருத்துவர் - ஞானசார தேரர் பகிரங்கம்  கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய கடும்போக்குடைய அமைப்பு ஒன்றை அரச மருத்துவர் ஒருவர் வழிநடத்துவதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்  தெரிவித்துள்ளார். யூடியுப் அலைவரிசை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.கல்முனை அரச வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றி வரும் மருத்துவர் ஒருவரே இந்த கடும்போக்குவாத அமைப்பிற்கு தலைமை தாங்குகின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.இந்த வன்முறைக் குழு, தன் ஆதரவாளர்களுக்கு உலகம் எந்த வேலைக்கும் தகுதியற்றது, குழந்தைகள் கல்வி கற்கக் கூடாது, புத்தகங்களைப் படிக்க வேண்டாம் என போதிக்கின்றது என தெரிவித்துள்ளார்.மேலும், தங்களது வாழ்வை "தெய்வத்திற்காக" அர்ப்பணிக்க வேண்டும் எனவும் இந்தக் குழுவின் தலைவர் மக்களை வழிநடத்துவதாக தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.இந்த அமைப்பின் ஆதரவாளர்கள் தங்களது குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்புவதில்லை என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்கள் பல்லின மக்கள் வாழும் இந்நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்ற நிலையில் இனங்களுக்கு இடையில் விரிசலையும் ஏற்படுத்துவதாக சமூக ஆரவலர்கள் விமர்சிக்கின்றனர். இந்நிலையில் இது குறித்து அரசு மௌனம் காப்பது இனங்களுக்கு இடையிலான விரிசலை மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement