• Nov 22 2024

பிரான்ஸ் தலைநகரில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமை..!samugammedia

Tamil nila / Dec 14th 2023, 7:26 am
image

பாரிஸில் யூத எதிர்ப்பு தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் 330 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை விடவும், இந்த 2023 ஆம் ஆண்டில் இந்த அதிகரிப்பு பாிவாகியுள்ளது. இவ்வருடத்தில் 550 யூத எதிர்ப்பு தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.

நாஸிப்படையின் ஸ்வாஸ்திகா லட்சணைகளை வரைவது, யூதர்களை தாக்குவது, கல்லறைகளை சேதப்படுத்துவது என பல எதிர்ப்பு சம்பவங்கள் பரிசில் பதிவாகியுள்ளன.

பாரிஸில் இவ்வருடத்தில் 175 பேர் மேற்படி குற்றச்செயல்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் இந்த தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. மொத்தமாக இடம்பெற்ற 550 சம்பவங்களில் 484 சம்பவங்கள் இந்த திகதியின் பின்னர் இடம்பெற்றவையாகும். மேற்படி தகவல்களை நேற்று செவ்வாய்க்கிழமை பாரிஸ் பொலிஸ் தலைமை அதிகாரி வெளியிட்டார்.

முன்னதாக, கடந்த நவம்பர் மாத இறுதியில் உள்துறை அமைச்சர் தெரிவிக்கையில், நாடு முழுவதும் இவ்வருடத்தில் 1,800 யூத எதிர்ப்பு தாக்குதல்கள் பதிவானதாக தெரிவித்திருந்தார்.

பிரான்ஸ் தலைநகரில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமை.samugammedia பாரிஸில் யூத எதிர்ப்பு தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் 330 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டை விடவும், இந்த 2023 ஆம் ஆண்டில் இந்த அதிகரிப்பு பாிவாகியுள்ளது. இவ்வருடத்தில் 550 யூத எதிர்ப்பு தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.நாஸிப்படையின் ஸ்வாஸ்திகா லட்சணைகளை வரைவது, யூதர்களை தாக்குவது, கல்லறைகளை சேதப்படுத்துவது என பல எதிர்ப்பு சம்பவங்கள் பரிசில் பதிவாகியுள்ளன.பாரிஸில் இவ்வருடத்தில் 175 பேர் மேற்படி குற்றச்செயல்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.குறிப்பாக ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் இந்த தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. மொத்தமாக இடம்பெற்ற 550 சம்பவங்களில் 484 சம்பவங்கள் இந்த திகதியின் பின்னர் இடம்பெற்றவையாகும். மேற்படி தகவல்களை நேற்று செவ்வாய்க்கிழமை பாரிஸ் பொலிஸ் தலைமை அதிகாரி வெளியிட்டார்.முன்னதாக, கடந்த நவம்பர் மாத இறுதியில் உள்துறை அமைச்சர் தெரிவிக்கையில், நாடு முழுவதும் இவ்வருடத்தில் 1,800 யூத எதிர்ப்பு தாக்குதல்கள் பதிவானதாக தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement