• Jan 24 2025

ஆரம்பமாகவுள்ள சிவனடி பாதமலை பருவகாலம்....! ஏற்பாடுகள் தீவிரம்...!

Sharmi / Dec 7th 2024, 11:48 am
image

சிவனடி பாத மலை பருவகாலம் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தவகையில்,  எதிர்வரும் 13 ஆம் திகதி இரத்தினபுரி கல்பொத்தாவில ரஜமஹா விகாரையில் இருந்து நான்கு வழியாக சிவனடி பாத மலைக்கு சுவாமிகள், ஆபரணங்கள் மற்றும் பூஜை பொருட்கள் கொண்டு வர ஏற்பாடு நடைபெற்று வருவதாக சிவனடிபாத மலைக்கு பொறுப்பான ஊவா வெரலஸ்ஸ பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி தேரர் பெங்கமுவே தம்ம தின்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 14 ஆம் திகதி பௌர்ணமி நாளில் ஆரம்பிக்கப்படவுள்ள 2024/2025  பருவகாலத்தையொட்டி இரத்தினபுரி,கல்பொத்தாவில ரஜமஹா விகாரையில் இருந்து பலாபத்வில வழியாகவும், குரு விற்ற வழியாகவும்,பலாங்கொட பொகவந்தலாவ வழியாகவும், இரத்தினபுரி, காவத்தை,அவிஸ்சாவலை, தெகியோவிற்ற,கரவனல்ல,எட்டியாந்தொட்ட, கித்துல்கல,கினிகத்தேன,வட்டவளை, ஹட்டன்,டிக்கோயா, நோர்வூட், மஸ்கெலியா, வழியாக நல்லதண்ணி நகரில் உள்ள பௌத்த மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு 13 ஆம் திகதி இரவு மலைக்கு லக்சபான இராணுவ முகாம் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் மூலம் மலை உச்சிக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கொண்டு சென்று அங்கு பௌத்த மத துறவிகள் இணைந்து சுவாமிகள் பிரதிஷ்டை செய்து 14 ஆம் திகதி அதிகாலை முதல் பிரித் ஓதும் வைபவம் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து 2024/2025 க்கான சிவனடி பாத மலை பருவகாலம் ஆரம்பமாகி 2025 வைகாசி மாதம் வரும் வைகாசி விசாகம் தினத்தன்று நிறைவுக்கு வரும்.

தொடர்ந்து ஆறு மாதங்கள் இடம்பெறும் பருவத்தில் மலைக்கு தரிசனம் செய்ய செல்லும் யாத்திரிகர்கள் பொலித்தீன், பிளாஸ்டிக் போத்தல்கள்,உக்கா பொருட்கள் கொண்டு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது எனவும், போதைப் பொருள் வர்த்தகம் சட்ட விரோதமாக முறையில் எவ்விதமான செயல்களையும் ஈடுபடகூடாது எனவும் 24 மணி நேரமும் பாதுகாப்பு அதிகாரிகள் சிவில் உடையில் கண்காணிப்பு மேற்கொண்டு வருவார்கள் என தெரிவித்தார்.

மேலும், தற்போது இந்த பகுதியில் கன மழை காரணமாக நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளதால் நீர் தேக்கங்களில் நீராட வேண்டாம் எனவும் நீராடுவதற்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நீராடுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

13/12/2024 அன்று கல்பொத்தாவில ரஜமஹா விகாரையில் இருந்து நான்கு வழியாக கொண்டு வரப்படும் சுவாமிகள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பான முறையில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கொண்டு வரும் போது பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

ஆரம்பமாகவுள்ள சிவனடி பாதமலை பருவகாலம். ஏற்பாடுகள் தீவிரம். சிவனடி பாத மலை பருவகாலம் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அந்தவகையில்,  எதிர்வரும் 13 ஆம் திகதி இரத்தினபுரி கல்பொத்தாவில ரஜமஹா விகாரையில் இருந்து நான்கு வழியாக சிவனடி பாத மலைக்கு சுவாமிகள், ஆபரணங்கள் மற்றும் பூஜை பொருட்கள் கொண்டு வர ஏற்பாடு நடைபெற்று வருவதாக சிவனடிபாத மலைக்கு பொறுப்பான ஊவா வெரலஸ்ஸ பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி தேரர் பெங்கமுவே தம்ம தின்ன தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,எதிர்வரும் 14 ஆம் திகதி பௌர்ணமி நாளில் ஆரம்பிக்கப்படவுள்ள 2024/2025  பருவகாலத்தையொட்டி இரத்தினபுரி,கல்பொத்தாவில ரஜமஹா விகாரையில் இருந்து பலாபத்வில வழியாகவும், குரு விற்ற வழியாகவும்,பலாங்கொட பொகவந்தலாவ வழியாகவும், இரத்தினபுரி, காவத்தை,அவிஸ்சாவலை, தெகியோவிற்ற,கரவனல்ல,எட்டியாந்தொட்ட, கித்துல்கல,கினிகத்தேன,வட்டவளை, ஹட்டன்,டிக்கோயா, நோர்வூட், மஸ்கெலியா, வழியாக நல்லதண்ணி நகரில் உள்ள பௌத்த மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு 13 ஆம் திகதி இரவு மலைக்கு லக்சபான இராணுவ முகாம் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் மூலம் மலை உச்சிக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கொண்டு சென்று அங்கு பௌத்த மத துறவிகள் இணைந்து சுவாமிகள் பிரதிஷ்டை செய்து 14 ஆம் திகதி அதிகாலை முதல் பிரித் ஓதும் வைபவம் நடைபெறும்.அதனைத் தொடர்ந்து 2024/2025 க்கான சிவனடி பாத மலை பருவகாலம் ஆரம்பமாகி 2025 வைகாசி மாதம் வரும் வைகாசி விசாகம் தினத்தன்று நிறைவுக்கு வரும்.தொடர்ந்து ஆறு மாதங்கள் இடம்பெறும் பருவத்தில் மலைக்கு தரிசனம் செய்ய செல்லும் யாத்திரிகர்கள் பொலித்தீன், பிளாஸ்டிக் போத்தல்கள்,உக்கா பொருட்கள் கொண்டு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது எனவும், போதைப் பொருள் வர்த்தகம் சட்ட விரோதமாக முறையில் எவ்விதமான செயல்களையும் ஈடுபடகூடாது எனவும் 24 மணி நேரமும் பாதுகாப்பு அதிகாரிகள் சிவில் உடையில் கண்காணிப்பு மேற்கொண்டு வருவார்கள் என தெரிவித்தார்.மேலும், தற்போது இந்த பகுதியில் கன மழை காரணமாக நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளதால் நீர் தேக்கங்களில் நீராட வேண்டாம் எனவும் நீராடுவதற்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நீராடுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.13/12/2024 அன்று கல்பொத்தாவில ரஜமஹா விகாரையில் இருந்து நான்கு வழியாக கொண்டு வரப்படும் சுவாமிகள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பான முறையில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கொண்டு வரும் போது பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement