திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈச்சம் குளத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, குளம் வற்றும் நிலையை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எல் நினோ காலநிலைத் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி மற்றும் நீண்டகாலமாக போதிய மழைவீழ்ச்சி இல்லாத நிலை காரணமாக, ஈச்சம் குளத்தின் நீர்மட்டம் தொடர்ச்சியாகக் குறைந்து வருகிறது.
இதனால், குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, ஈச்சம் குளத்தின் நீரை நம்பி மேற்கொள்ளப்படும் மேட்டு நிலப் பயிர்ச்செய்கைகளுக்கு தேவையான நீரைப் பெற்றுக்கொள்வதில் விவசாயிகள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். மிளகாய், கத்தரி, வெண்டைக்காய் உள்ளிட்ட பல்வேறு பயிர்களைப் பயிரிடும் விவசாயிகளுக்கு நீர்ப்பற்றாக்குறை பெரும் சவாலாக மாறியுள்ளது.
அதேவேளை, குளத்தை அண்டிய பகுதிகளில் கால்நடைகளை வளர்த்து வரும் கால்நடை வளர்ப்பாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கால்நடைகளுக்குத் தேவையான குடிநீர் மற்றும் மேய்ச்சல் வளங்கள் குறைந்து வருவதால், கால்நடைகளைப் பராமரிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வரட்சி மேலும் தொடரும் பட்சத்தில், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்படுவதுடன், எதிர்கால பயிர்ச்செய்கைகளையும் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படக்கூடும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களின் நிலைமையை கருத்திற்கொண்டு, அவசர குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கான நீர் விநியோகம், கால்நடைகளுக்கான குடிநீர் உள்ளிட்ட நிவாரண நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எல் நினோவால் வற்றும் ஈச்சம் குளம் – விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் பாதிப்பு திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈச்சம் குளத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, குளம் வற்றும் நிலையை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எல் நினோ காலநிலைத் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி மற்றும் நீண்டகாலமாக போதிய மழைவீழ்ச்சி இல்லாத நிலை காரணமாக, ஈச்சம் குளத்தின் நீர்மட்டம் தொடர்ச்சியாகக் குறைந்து வருகிறது.இதனால், குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.குறிப்பாக, ஈச்சம் குளத்தின் நீரை நம்பி மேற்கொள்ளப்படும் மேட்டு நிலப் பயிர்ச்செய்கைகளுக்கு தேவையான நீரைப் பெற்றுக்கொள்வதில் விவசாயிகள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். மிளகாய், கத்தரி, வெண்டைக்காய் உள்ளிட்ட பல்வேறு பயிர்களைப் பயிரிடும் விவசாயிகளுக்கு நீர்ப்பற்றாக்குறை பெரும் சவாலாக மாறியுள்ளது.அதேவேளை, குளத்தை அண்டிய பகுதிகளில் கால்நடைகளை வளர்த்து வரும் கால்நடை வளர்ப்பாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கால்நடைகளுக்குத் தேவையான குடிநீர் மற்றும் மேய்ச்சல் வளங்கள் குறைந்து வருவதால், கால்நடைகளைப் பராமரிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வரட்சி மேலும் தொடரும் பட்சத்தில், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்படுவதுடன், எதிர்கால பயிர்ச்செய்கைகளையும் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படக்கூடும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.எனவே, வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களின் நிலைமையை கருத்திற்கொண்டு, அவசர குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கான நீர் விநியோகம், கால்நடைகளுக்கான குடிநீர் உள்ளிட்ட நிவாரண நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.