• Apr 20 2026

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீசெல்லக் கதிர்காம சுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற சூரசங்காரம்!

shanu / Oct 27th 2025, 8:29 pm
image

மட்டக்களப்பு -  குருக்கள்மடம் ஸ்ரீல ஸ்ரீசெல்லக் கதிர்காம சுவாமி ஆலயத்தில் பக்தி பூர்வமாக சூரசம்காரம் நடைபெற்றது.


கடந்த 22 ம் திகதி ஆரம்பமாகிய கந்தசஷ்டி விரத வழிபாடுகளின் ஆறாம் நாள் ( 27 ) இன்று சூரசம்காரம் பக்தி பூர்வமாக நடைபெற்றது.


ஆலயத்தில் இடம்பெற்ற விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகி, முருகப்பெருமானுக்கு விசேட அபிசேகம் இடம்பெற்று , வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து, உள் வீதி வலம் இடம்பெற்று , வெளிவீதியில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ அரோகரா கோசங்கள் முழங்க சூரசம்காரம் நடைபெற்றது.


முருகப்பெருமான் சூரபத்மனை அழித்த இதிகாச கதைகளுடன் தொடர்புடையதாக அதனை நினைவுப்படுத்தும் வகையில் சூரசம்காரம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


இக் கிரியை வழிபாடுகள் யாவும் ஆலயம் பிரதம குரு சிவ ஸ்ரீ நவரெத்தினமுரசொலிமாறன் குருக்கள் தலைமையிலான குருமார் குழுவினால் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீசெல்லக் கதிர்காம சுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற சூரசங்காரம் மட்டக்களப்பு -  குருக்கள்மடம் ஸ்ரீல ஸ்ரீசெல்லக் கதிர்காம சுவாமி ஆலயத்தில் பக்தி பூர்வமாக சூரசம்காரம் நடைபெற்றது.கடந்த 22 ம் திகதி ஆரம்பமாகிய கந்தசஷ்டி விரத வழிபாடுகளின் ஆறாம் நாள் ( 27 ) இன்று சூரசம்காரம் பக்தி பூர்வமாக நடைபெற்றது.ஆலயத்தில் இடம்பெற்ற விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகி, முருகப்பெருமானுக்கு விசேட அபிசேகம் இடம்பெற்று , வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து, உள் வீதி வலம் இடம்பெற்று , வெளிவீதியில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ அரோகரா கோசங்கள் முழங்க சூரசம்காரம் நடைபெற்றது.முருகப்பெருமான் சூரபத்மனை அழித்த இதிகாச கதைகளுடன் தொடர்புடையதாக அதனை நினைவுப்படுத்தும் வகையில் சூரசம்காரம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.இக் கிரியை வழிபாடுகள் யாவும் ஆலயம் பிரதம குரு சிவ ஸ்ரீ நவரெத்தினமுரசொலிமாறன் குருக்கள் தலைமையிலான குருமார் குழுவினால் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement