எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரசாரப்பணிகள் இன்றைய தினம்(16) ஆலய வழிபாட்டுகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரனின் தலைமையில் கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் ஆலயத்தில் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதை தொடர்ந்து, மக்கள் சந்திப்பு கூட்டமும் இடம்பெற்றது.
இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும் (அரசியல் பிரிவு) கொட்டகலை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ராஜமணி பிரசாத், முன்னாள் உப தவிசாளர், உறுப்பினர்கள், அரசியல் அமைப்பாளர்கள், ஆலய பரிபாலன சபையினர், வர்த்தகர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்களாக அதன் பொது செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன், தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல் ஆகியோர் நுவரெலியா மாவட்டத்தில் இம்முறை யானை சின்னத்தில் களமிறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலய வழிபாட்டுடன் ஆரம்பமானது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரசாரப் பணிகள். எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரசாரப்பணிகள் இன்றைய தினம்(16) ஆலய வழிபாட்டுகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரனின் தலைமையில் கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் ஆலயத்தில் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதை தொடர்ந்து, மக்கள் சந்திப்பு கூட்டமும் இடம்பெற்றது.இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும் (அரசியல் பிரிவு) கொட்டகலை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ராஜமணி பிரசாத், முன்னாள் உப தவிசாளர், உறுப்பினர்கள், அரசியல் அமைப்பாளர்கள், ஆலய பரிபாலன சபையினர், வர்த்தகர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்களாக அதன் பொது செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன், தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல் ஆகியோர் நுவரெலியா மாவட்டத்தில் இம்முறை யானை சின்னத்தில் களமிறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.