• Sep 20 2024

இலங்கை ரூபாயின் மதிப்பு விரைவில் குறையும்..! மக்களுக்கு பேரிடித் தகவல் samugammedia

Chithra / Jun 11th 2023, 1:09 pm
image

Advertisement

கடனை திருப்பிச் செலுத்தும் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டு, இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால், இலங்கை ரூபாயின் மதிப்பு மீண்டும் குறைய வாய்ப்புள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

நேற்று ஹங்வெல்லவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போது அவர்  இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

சரக்கு இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் மற்றும் வெளிநாட்டு கடனை திருப்பிச் செலுத்துவது இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார ஸ்திரத்தன்மை தற்காலிகமான நிலை ஆகும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக ஏற்கனவே வழங்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் நோக்கில் அரசாங்கம் செயற்படுமானால் அது ஜனநாயக விரோத நடவடிக்கையாக அமையும்.

எக்காரணம் கொண்டும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்தால், அவ்வாறானதொரு நிகழ்வுக்கு எமது கட்சி தயாராக இருக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.


ஒலிபரப்பு அதிகாரசபை சட்டம் குறித்து கருத்து தெரிவித்த எம்.பி., 

தற்போது அத்தகைய சட்டமூலங்களை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார்.

இதுபோன்ற சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு பதிலாக சில விடயங்களில் கட்டுப்பாடுகளை வலுப்படுத்த சுய தணிக்கையை நிறுவலாம் என்று அவர் கூறினார்.

இலங்கை ரூபாயின் மதிப்பு விரைவில் குறையும். மக்களுக்கு பேரிடித் தகவல் samugammedia கடனை திருப்பிச் செலுத்தும் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டு, இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால், இலங்கை ரூபாயின் மதிப்பு மீண்டும் குறைய வாய்ப்புள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.நேற்று ஹங்வெல்லவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போது அவர்  இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,சரக்கு இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் மற்றும் வெளிநாட்டு கடனை திருப்பிச் செலுத்துவது இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார ஸ்திரத்தன்மை தற்காலிகமான நிலை ஆகும்.உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக ஏற்கனவே வழங்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் நோக்கில் அரசாங்கம் செயற்படுமானால் அது ஜனநாயக விரோத நடவடிக்கையாக அமையும்.எக்காரணம் கொண்டும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்தால், அவ்வாறானதொரு நிகழ்வுக்கு எமது கட்சி தயாராக இருக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.ஒலிபரப்பு அதிகாரசபை சட்டம் குறித்து கருத்து தெரிவித்த எம்.பி., தற்போது அத்தகைய சட்டமூலங்களை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார்.இதுபோன்ற சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு பதிலாக சில விடயங்களில் கட்டுப்பாடுகளை வலுப்படுத்த சுய தணிக்கையை நிறுவலாம் என்று அவர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement