• Apr 22 2026

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் போடப்பட்டிருந்த பெட்டிக்கடைகள்; கரைச்சி பிரதேச சபையால் அகற்றல்!

shanu / Jan 13th 2026, 4:43 pm
image

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் அனுமதியின்றி நடத்தப்பட்டு வந்த பெட்டிக் கடைகள்  கரைச்சி பிரதேசசபையால் அகற்றப்பட்டன. 


கடந்த 2019 ஆண்டு கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரால் குறித்த பேருந்து நிலையம் பிரதேச சபைக்கு ஆளுகைக்கு அற்ற நிலையில்  கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.


தற்போது தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் பின்னர் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில்  கிளிநொச்சி நகர் பேருந்து நிலையத்தை கரைச்சி பிரதேச சபை பராமரித்து அனைத்து செயல்பாடுகளையும் செயல்படுத்துமாறு முன்மொழியப்பட்டு வழங்கப்பட்டது.


அந்த வகையில் கடந்த ஆண்டு 09.12.2025 ஆம் திகதி பேருந்து நிலையத்தில் வாழ்வாதாரத்துக்காக அமைக்கப்பட்ட பெட்டிக்கடைகள் அகற்றுமாறு விளம்பரங்கள் போடப்பட்டுள்ளது. 


இவற்றை அவதானித்த பெட்டிக்கடை உரிமையாளர்கள் பிரதேச சபைக்கு கடிதம் மூலம் தங்களுக்கு  குறுகிய காலம் கொடுங்கள். நாங்கள் அகற்றுகின்றோம் என்று கடிதம் மூலம் தெரியப்படுத்தினர். 


இருப்பினும்  டித்வா சூறாவளி மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட  நிலையில் வடமாகாண ஆளுநருக்கு பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் கடிதம் மூலம் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் பிரதேச சபை இவ்வாறு குறித்த கடைகளை அகற்றுமாறு கடிதம் அனுப்பியுள்ளார்கள்.

எங்களின் வாழ்வாதார நிலையை கருத்தில் கொள்ளுமாறு கடிதம் அனுப்பியுள்ளார்கள்.


இவற்றை அவதானித்த  வடமாகாண ஆளுநர்,  பாதிக்கப்பட்ட நபர்கள் மீது சரியான தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கும் படி கிளிநொச்சி மாவட்ட செயலாளருக்கு  கடிதம் ஒன்றை கடந்த 23.12.2025 ஆம் திகதி அனுப்பியுள்ளார். 


இவ்வாறான பின்னணியில்  குறுகிய காலத்தில்  தமது பெட்டிக்கடைகளை அகற்றிச் சென்றதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் போடப்பட்டிருந்த பெட்டிக்கடைகள்; கரைச்சி பிரதேச சபையால் அகற்றல் கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் அனுமதியின்றி நடத்தப்பட்டு வந்த பெட்டிக் கடைகள்  கரைச்சி பிரதேசசபையால் அகற்றப்பட்டன. கடந்த 2019 ஆண்டு கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரால் குறித்த பேருந்து நிலையம் பிரதேச சபைக்கு ஆளுகைக்கு அற்ற நிலையில்  கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.தற்போது தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் பின்னர் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில்  கிளிநொச்சி நகர் பேருந்து நிலையத்தை கரைச்சி பிரதேச சபை பராமரித்து அனைத்து செயல்பாடுகளையும் செயல்படுத்துமாறு முன்மொழியப்பட்டு வழங்கப்பட்டது.அந்த வகையில் கடந்த ஆண்டு 09.12.2025 ஆம் திகதி பேருந்து நிலையத்தில் வாழ்வாதாரத்துக்காக அமைக்கப்பட்ட பெட்டிக்கடைகள் அகற்றுமாறு விளம்பரங்கள் போடப்பட்டுள்ளது. இவற்றை அவதானித்த பெட்டிக்கடை உரிமையாளர்கள் பிரதேச சபைக்கு கடிதம் மூலம் தங்களுக்கு  குறுகிய காலம் கொடுங்கள். நாங்கள் அகற்றுகின்றோம் என்று கடிதம் மூலம் தெரியப்படுத்தினர். இருப்பினும்  டித்வா சூறாவளி மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட  நிலையில் வடமாகாண ஆளுநருக்கு பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் கடிதம் மூலம் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் பிரதேச சபை இவ்வாறு குறித்த கடைகளை அகற்றுமாறு கடிதம் அனுப்பியுள்ளார்கள்.எங்களின் வாழ்வாதார நிலையை கருத்தில் கொள்ளுமாறு கடிதம் அனுப்பியுள்ளார்கள்.இவற்றை அவதானித்த  வடமாகாண ஆளுநர்,  பாதிக்கப்பட்ட நபர்கள் மீது சரியான தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கும் படி கிளிநொச்சி மாவட்ட செயலாளருக்கு  கடிதம் ஒன்றை கடந்த 23.12.2025 ஆம் திகதி அனுப்பியுள்ளார். இவ்வாறான பின்னணியில்  குறுகிய காலத்தில்  தமது பெட்டிக்கடைகளை அகற்றிச் சென்றதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement