நாடளாவிய ரீதியில் கடந்த சில வாரங்களாக பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் 'யுக்திய' நடவடிக்கையின் போது நாளாந்தம் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு வருவதுடன் போதைப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பல்வேறு போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 699 சந்தேகநபர்கள் மற்றும் குற்றவியல் திணைக்களத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட குற்றவாளிகள் பட்டியலில் இருந்த 325 சந்தேகநபர்கள் என மொத்தம் 1024 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாளுக்கு நாள் தீவிரமடையும் 'யுக்திய' நடவடிக்கை. மேலும் 1024 சந்தேக நபர்கள் கைது.samugammedia நாடளாவிய ரீதியில் கடந்த சில வாரங்களாக பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் 'யுக்திய' நடவடிக்கையின் போது நாளாந்தம் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு வருவதுடன் போதைப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பல்வேறு போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 699 சந்தேகநபர்கள் மற்றும் குற்றவியல் திணைக்களத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட குற்றவாளிகள் பட்டியலில் இருந்த 325 சந்தேகநபர்கள் என மொத்தம் 1024 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அதேவேளை குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது,ஹெராயின் 227 கிராம், ஐஸ் 168 கிராம், கஞ்சா 8 கிலோ 40 கிராம், கஞ்சா 13,892 செடிகள், 227 கிராம், மதனா மோடகா 24 கிராம், 647 மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.