• Nov 22 2024

வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! கடுமையாகும் நடைமுறை..!

Chithra / Jan 17th 2024, 9:34 am
image

 

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கோரி மோசடி செய்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சமீப காலமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பல மோசடி சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

அவ்வாறு போலி முகவர்களிடம் பணத்தை கொடுத்துவிட்டு மீள பெற முடியாதவர்கள் போதியளவு ஆதரமின்மையால் பொலிஸாரை நாட முடியாத நிலையும் உள்ளது. 

இதனால் அவர்கள் செலுத்திய பெருந்தொகை பணத்தை இழக்க நேரிடுகின்றனர்.

குறிப்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன், பணியகத்தின் இணையதளமான www.slbfe.lk ஐப் பார்வையிட வலியுறுத்தப்படுகிறது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான சரியான உரிமம் குறித்த முகவருக்கு உள்ளதா மற்றும் அந்த நிறுவனம் உத்தியோகப்பூர்வ வேலைவாய்ப்பு நிறுவனமா என்பதை இதனூடாக கண்டறியமுடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இதுமட்டுமன்றி வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடுவோர் 1989 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்வதன் மூலம் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு. கடுமையாகும் நடைமுறை.  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கோரி மோசடி செய்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.சமீப காலமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பல மோசடி சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.அவ்வாறு போலி முகவர்களிடம் பணத்தை கொடுத்துவிட்டு மீள பெற முடியாதவர்கள் போதியளவு ஆதரமின்மையால் பொலிஸாரை நாட முடியாத நிலையும் உள்ளது. இதனால் அவர்கள் செலுத்திய பெருந்தொகை பணத்தை இழக்க நேரிடுகின்றனர்.குறிப்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன், பணியகத்தின் இணையதளமான www.slbfe.lk ஐப் பார்வையிட வலியுறுத்தப்படுகிறது.வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான சரியான உரிமம் குறித்த முகவருக்கு உள்ளதா மற்றும் அந்த நிறுவனம் உத்தியோகப்பூர்வ வேலைவாய்ப்பு நிறுவனமா என்பதை இதனூடாக கண்டறியமுடியும் என தெரிவிக்கப்படுகிறது.இதுமட்டுமன்றி வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடுவோர் 1989 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்வதன் மூலம் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement