• Oct 19 2024

தமது சுயநலத்திற்காக கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய தமிழரசு கட்சி! – வேந்தன் குற்றச்சாட்டு

Chithra / Jan 14th 2023, 4:04 pm
image

Advertisement

விடுதலைப்புலிகளின் தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழரசு கட்சி தேர்தலுக்காக

நடுத்தெருவில் விட்டுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்கள் இன்று நடுத்தெருவில் நிற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வீட்டிற்கு வாக்களித்த மக்கள் தமிழரசுக்கட்சிக்கு வாக்களிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

தலைவரால் தெரிவு செய்யப்பட்ட வீட்டு சின்னத்திற்கு வாக்களித்த மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கே வாக்களித்திருந்ததாக ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் இன்று தமிழரசு கட்சி தமது சுயநலத்திற்காக கூட்டமைப்பில் இருந்து வெளியேறி விட்டதாக வேந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது ஒரு தேசிய ரீதியிலான அரசியல் கட்டமைப்பு. போராளிகள் மீது சேறு பூசுவதற்கு சிலர் முனைவதாகவும் ஆனால் தாம் நதிபோன்று ஓடிக்கொண்டே இருப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது சுயநலத்திற்காக கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய தமிழரசு கட்சி – வேந்தன் குற்றச்சாட்டு விடுதலைப்புலிகளின் தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழரசு கட்சி தேர்தலுக்காகநடுத்தெருவில் விட்டுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்கள் இன்று நடுத்தெருவில் நிற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வீட்டிற்கு வாக்களித்த மக்கள் தமிழரசுக்கட்சிக்கு வாக்களிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.தலைவரால் தெரிவு செய்யப்பட்ட வீட்டு சின்னத்திற்கு வாக்களித்த மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கே வாக்களித்திருந்ததாக ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஆனால் இன்று தமிழரசு கட்சி தமது சுயநலத்திற்காக கூட்டமைப்பில் இருந்து வெளியேறி விட்டதாக வேந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது ஒரு தேசிய ரீதியிலான அரசியல் கட்டமைப்பு. போராளிகள் மீது சேறு பூசுவதற்கு சிலர் முனைவதாகவும் ஆனால் தாம் நதிபோன்று ஓடிக்கொண்டே இருப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement