• Jun 22 2024

தமிழ்த் தேசிய இனம் தன் இலக்கு நோக்கிய பயணத்தில் இடர்களை எதிர்த்து முன்னேற வேண்டும்! - சிறீதரன் எம்.பி.

Chithra / May 28th 2024, 4:21 pm
image

Advertisement

 

தமிழ்த்தேசிய இனம் தன் இலக்கு நோக்கிய பயணத்தில் இடர்களை எதிர்த்து முன்னேற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில், 

இறுதிப்போரில் இலங்கை அரசாங்கம் எமது மக்களை ஆயுத முனையிலும் பட்டினியாலும் இனப்படுகொலை செய்த போது கஞ்சிக்காக வரிசையில் நின்றோம்.

அதனை எமது தற்கால சமூகத்திற்கு நினைவுபடுத்தும் முகமாக சிரட்டையில் கஞ்சி காய்ச்சி தன்னெழுர்ச்சியாக மக்கள் வழங்கியபோது பொலிஸார் கதற கதற கைது செய்தனர். 

பல்கலைக்கழக மாணவர்கள் கஞ்சி காய்ச்சும் போதும் அதனை சப்பாத்து கால்களினால் தட்டி ஊத்தினர்.

கேட்டால் கஞ்சிக்கு சுகாதாரம் இல்லை என்று அதனையும் கடந்து, கடந்த 23 மற்றும் 24ம் திகதிகளை பார்க்கும் போது தன்சல் என்ற போர்வையில்  இராணுவமும் அவர்களுடன் சேர்ந்த ஒட்டுக்குழுக்களும் எந்த சுகாதார முறையும் அற்று மிக மோசமாக செய்திருந்தனர்.

தமிழர்கள் ஒரு தனித்துவமான இனம் அவர்களுக்கே உரித்தான மொழி, வணக்க பண்பாட்டு முறைகள் உள்ளன. 

சிங்கள அடையாளங்களையும், பண்பாட்டு முறைகளையும் இலங்கை அரசு இங்குள்ள படைகள் மூலம் திணிக்க முயல்கிறது. 

அதனை இந்த முறை வெளிப்படையாக செய்தது. இவ்வாறு செய்த நிலையில் எமது மக்கள் தங்களை மறந்து செயற்பட்டது மன வேதனை தருகிறது.

கிளிநொச்சி, யாழ்ப்பாணம், புதுக்குடியிருப்பு பகுதியில் மக்கள் வேடிக்கை பார்த்தாலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு எமது கஞ்சிப்பாணைக்கும் கஞ்சிக்கும் நடந்த அடாவடியை மறந்து வரிசையில் மக்கள் நிற்கின்ற போது  எமது இனத்திற்கு இதுவும் ஒரு சாபக்கேடு.

நாம் போராடுகின்ற இனமாக இருந்தால் சில விடயங்களை எதிர்க்க வேண்டும். 

கறுப்பின மக்கள் தென்னாபிரிக்காவில் வெள்ளையர்களுக்காகவே போராடும் போது ஒரு பேருந்தில்  ஒரு பெண்ணை வெள்ளையர்கள் தள்ளி வீழ்த்திய போது ஒட்டுமொத்த வெள்ளையர்களும் வெள்ளையர்கள் பயன்படுத்தும் போக்குவரத்தை தடுத்தனர்.

நாங்களும் சில விடயங்களை போராட்டம் மற்றும் செயற்பாடுகள் மூலம் முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

கேள்வி - பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக்கட்சி மெளனம் காக்கிறது. 

தமிழரசுக்கட்சி மெளனம் காக்கவில்லை. நான் உட்பட பலர் வெளிப்படையாக பேசியிருக்கிறோம். எமது கட்சிக்குள் இரு நிலைப்பாடுகள் உள்ளன.

மத்திய குழுவிலும் கலந்துரையாடியிருக்கின்றோம். முடிவு எட்டப்படவில்லை. இன்னும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை அறிவித்ததும் முடிவு எடுக்கப்படும். 

எந்தவொரு வேட்பாளராக இருந்தாலும் 2002ம் ஆண்டு ஒஸ்லோவில் எடுக்கப்பட்ட சமஷ்டி முடிவை அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஆதரித்திருந்தார்.

அதனை இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவரும் ஏனைய வேட்பாளரும் முன்வைக்கட்டும் அது வரை எமது இனத்திற்கு நடந்த அநீதிக்கு நீதியை வேண்டி தெளிவாக சொல்வதற்கு பொது வேட்பாளரை கொள்கைக்காக களம் இறக்க வேண்டும்  என தெரிவித்தார்

தமிழ்த் தேசிய இனம் தன் இலக்கு நோக்கிய பயணத்தில் இடர்களை எதிர்த்து முன்னேற வேண்டும் - சிறீதரன் எம்.பி.  தமிழ்த்தேசிய இனம் தன் இலக்கு நோக்கிய பயணத்தில் இடர்களை எதிர்த்து முன்னேற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.தொடர்ந்து தெரிவிக்கையில், இறுதிப்போரில் இலங்கை அரசாங்கம் எமது மக்களை ஆயுத முனையிலும் பட்டினியாலும் இனப்படுகொலை செய்த போது கஞ்சிக்காக வரிசையில் நின்றோம்.அதனை எமது தற்கால சமூகத்திற்கு நினைவுபடுத்தும் முகமாக சிரட்டையில் கஞ்சி காய்ச்சி தன்னெழுர்ச்சியாக மக்கள் வழங்கியபோது பொலிஸார் கதற கதற கைது செய்தனர். பல்கலைக்கழக மாணவர்கள் கஞ்சி காய்ச்சும் போதும் அதனை சப்பாத்து கால்களினால் தட்டி ஊத்தினர்.கேட்டால் கஞ்சிக்கு சுகாதாரம் இல்லை என்று அதனையும் கடந்து, கடந்த 23 மற்றும் 24ம் திகதிகளை பார்க்கும் போது தன்சல் என்ற போர்வையில்  இராணுவமும் அவர்களுடன் சேர்ந்த ஒட்டுக்குழுக்களும் எந்த சுகாதார முறையும் அற்று மிக மோசமாக செய்திருந்தனர்.தமிழர்கள் ஒரு தனித்துவமான இனம் அவர்களுக்கே உரித்தான மொழி, வணக்க பண்பாட்டு முறைகள் உள்ளன. சிங்கள அடையாளங்களையும், பண்பாட்டு முறைகளையும் இலங்கை அரசு இங்குள்ள படைகள் மூலம் திணிக்க முயல்கிறது. அதனை இந்த முறை வெளிப்படையாக செய்தது. இவ்வாறு செய்த நிலையில் எமது மக்கள் தங்களை மறந்து செயற்பட்டது மன வேதனை தருகிறது.கிளிநொச்சி, யாழ்ப்பாணம், புதுக்குடியிருப்பு பகுதியில் மக்கள் வேடிக்கை பார்த்தாலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு எமது கஞ்சிப்பாணைக்கும் கஞ்சிக்கும் நடந்த அடாவடியை மறந்து வரிசையில் மக்கள் நிற்கின்ற போது  எமது இனத்திற்கு இதுவும் ஒரு சாபக்கேடு.நாம் போராடுகின்ற இனமாக இருந்தால் சில விடயங்களை எதிர்க்க வேண்டும். கறுப்பின மக்கள் தென்னாபிரிக்காவில் வெள்ளையர்களுக்காகவே போராடும் போது ஒரு பேருந்தில்  ஒரு பெண்ணை வெள்ளையர்கள் தள்ளி வீழ்த்திய போது ஒட்டுமொத்த வெள்ளையர்களும் வெள்ளையர்கள் பயன்படுத்தும் போக்குவரத்தை தடுத்தனர்.நாங்களும் சில விடயங்களை போராட்டம் மற்றும் செயற்பாடுகள் மூலம் முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.கேள்வி - பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக்கட்சி மெளனம் காக்கிறது. தமிழரசுக்கட்சி மெளனம் காக்கவில்லை. நான் உட்பட பலர் வெளிப்படையாக பேசியிருக்கிறோம். எமது கட்சிக்குள் இரு நிலைப்பாடுகள் உள்ளன.மத்திய குழுவிலும் கலந்துரையாடியிருக்கின்றோம். முடிவு எட்டப்படவில்லை. இன்னும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை அறிவித்ததும் முடிவு எடுக்கப்படும். எந்தவொரு வேட்பாளராக இருந்தாலும் 2002ம் ஆண்டு ஒஸ்லோவில் எடுக்கப்பட்ட சமஷ்டி முடிவை அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஆதரித்திருந்தார்.அதனை இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவரும் ஏனைய வேட்பாளரும் முன்வைக்கட்டும் அது வரை எமது இனத்திற்கு நடந்த அநீதிக்கு நீதியை வேண்டி தெளிவாக சொல்வதற்கு பொது வேட்பாளரை கொள்கைக்காக களம் இறக்க வேண்டும்  என தெரிவித்தார்

Advertisement

Advertisement

Advertisement