• Sep 08 2024

தமிழ் மக்கள் போலி தேசிய மாயையிலிருந்து விடுபடத் தொடங்கியுள்ளனர்! அமைச்சர் டக்ளஸ்

Chithra / May 12th 2024, 5:17 pm
image

Advertisement

 

தமிழ் பொது வேட்பாளர் என்ற போலித் தேசிய மாயை அரசியலிலிருந்து, தமிழ் மக்கள் படிப்படியாக வெளிச்சத்திற்கு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம்தென்மராட்சி பிரதேசத்தை உள்ளடக்கிய கட்சியின் முக்கியஸ்தர்களுடன் இன்று (12) நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

நடைமுறை சாத்தியமான வழிகள் தொடர்பில் எமது கட்சி மட்டும் தெளிவாக இருக்கின்றது. ஆனால் இவ்விடயத்தில் எமது கட்சி இருப்பதை விட மக்களும் தெளிவாக இருக்க வேண்டும்.

குறிப்பாக நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அனுர குமார திசாநாயக்க ஆகிய மூன்று வேட்பாளர்கள் பிரதானமானவர்களாக காணப்படுகின்றார்கள்.

இந்த மூவரில் ஒருவருடன் கலந்துரையாடி எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும் என்ற பேரம்பேசலைச் செய்து கலந்துரையாடினால் தான் ஒரு ஆரோக்கியமான சூழல் உருவாகும்.

ஆனால்,  தற்போதைய நிலையில் ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வருவதே சரியானதாக இருக்கும் என நான் நினைக்கின்றேன்.

எனவே, எமது கட்சியின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்குதான் என்பதை நாம் ஆரம்பத்திலேயே வெளிப்படையாக அறிவித்து விட்டோம். என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் போலி தேசிய மாயையிலிருந்து விடுபடத் தொடங்கியுள்ளனர் அமைச்சர் டக்ளஸ்  தமிழ் பொது வேட்பாளர் என்ற போலித் தேசிய மாயை அரசியலிலிருந்து, தமிழ் மக்கள் படிப்படியாக வெளிச்சத்திற்கு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  சுட்டிக்காட்டியுள்ளார்.யாழ்ப்பாணம்தென்மராட்சி பிரதேசத்தை உள்ளடக்கிய கட்சியின் முக்கியஸ்தர்களுடன் இன்று (12) நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.நடைமுறை சாத்தியமான வழிகள் தொடர்பில் எமது கட்சி மட்டும் தெளிவாக இருக்கின்றது. ஆனால் இவ்விடயத்தில் எமது கட்சி இருப்பதை விட மக்களும் தெளிவாக இருக்க வேண்டும்.குறிப்பாக நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அனுர குமார திசாநாயக்க ஆகிய மூன்று வேட்பாளர்கள் பிரதானமானவர்களாக காணப்படுகின்றார்கள்.இந்த மூவரில் ஒருவருடன் கலந்துரையாடி எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும் என்ற பேரம்பேசலைச் செய்து கலந்துரையாடினால் தான் ஒரு ஆரோக்கியமான சூழல் உருவாகும்.ஆனால்,  தற்போதைய நிலையில் ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வருவதே சரியானதாக இருக்கும் என நான் நினைக்கின்றேன்.எனவே, எமது கட்சியின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்குதான் என்பதை நாம் ஆரம்பத்திலேயே வெளிப்படையாக அறிவித்து விட்டோம். என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement