• Nov 24 2024

மீண்டும் பரபரப்பாகும் தமிழ் அரசியல் களம்...!தமிழரசின் முக்கிய கூட்டம் இன்று...!samugammedia

Sharmi / Jan 27th 2024, 11:07 am
image

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம், மிகக் குறுகிய கால அவகாசத்தில் இன்று கூடுகின்றது.

மத்திய குழுக் கூட்டத்தை கூட்டுவதாக முடிவெடுக்கப்பட்டு, நேற்று இரவிரவாக மத்திய குழுவில் அங்கம் வகிப்போருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு திருகோணமலையில் இன்று(27) கூட்டம் இடம்பெறுகின்றது.

தமிழரசுக் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம்  திருகோணமலையில் இன்று நடைபெறவுள்ளது.

அதேவேளை நாளையதினம் கட்சியின் தேசிய மாநாடும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இந்தநிலையில் கடந்த 21 ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கான தேர்தல் இடம்பெற்றது. 321 பேர் வாக்களித்திருந்தனர்.

இதில் சிவஞானம் சிறீதரன் 184 வாக்குகளையும், எம்.ஏ.சுமந்திரன் 137 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர். 47 மேலதிக வாக்குகளால் சிறீதரன் வெற்றிபெற்று, தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கட்சியின் தேசிய மாநாட்டில் அவர் தலைமைப் பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார். இவ்வாறானதொரு பின்னணியில் இன்றைய தினம் பொதுக் குழுக் கூட்டத்துக்கு முன்பாக மத்திய குழுக் கூட்டம் நடைபெறுகின்றமை பரபரப்பாகியுள்ளது.

மத்திய குழு உறுப்பினர்களுக்கு மிகக் குறுகிய கால அவகாசத்தில் நேற்று இரவிரவாக அழைப்பு விடுக்கப்பட்டு இந்தக் கூட்டம் கூடப்படுகின்றமை பலவிதமான சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மீண்டும் பரபரப்பாகும் தமிழ் அரசியல் களம்.தமிழரசின் முக்கிய கூட்டம் இன்று.samugammedia இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம், மிகக் குறுகிய கால அவகாசத்தில் இன்று கூடுகின்றது.மத்திய குழுக் கூட்டத்தை கூட்டுவதாக முடிவெடுக்கப்பட்டு, நேற்று இரவிரவாக மத்திய குழுவில் அங்கம் வகிப்போருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு திருகோணமலையில் இன்று(27) கூட்டம் இடம்பெறுகின்றது.தமிழரசுக் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம்  திருகோணமலையில் இன்று நடைபெறவுள்ளது. அதேவேளை நாளையதினம் கட்சியின் தேசிய மாநாடும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இந்தநிலையில் கடந்த 21 ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கான தேர்தல் இடம்பெற்றது. 321 பேர் வாக்களித்திருந்தனர். இதில் சிவஞானம் சிறீதரன் 184 வாக்குகளையும், எம்.ஏ.சுமந்திரன் 137 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர். 47 மேலதிக வாக்குகளால் சிறீதரன் வெற்றிபெற்று, தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் தேசிய மாநாட்டில் அவர் தலைமைப் பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார். இவ்வாறானதொரு பின்னணியில் இன்றைய தினம் பொதுக் குழுக் கூட்டத்துக்கு முன்பாக மத்திய குழுக் கூட்டம் நடைபெறுகின்றமை பரபரப்பாகியுள்ளது.மத்திய குழு உறுப்பினர்களுக்கு மிகக் குறுகிய கால அவகாசத்தில் நேற்று இரவிரவாக அழைப்பு விடுக்கப்பட்டு இந்தக் கூட்டம் கூடப்படுகின்றமை பலவிதமான சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement