• Mar 15 2026

தாய்ப் பாசம் காட்டிய தலைவனை இழந்த ஈழத்தமிழர்கள்; அவர்களுக்காக குரல் கொடுப்பது எமது கடமை! விஜயின் அதிரடிப் பேச்சு

Chithra / Sep 20th 2025, 4:44 pm
image

 

இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பதும், அவர்களது கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் எமது கடமை எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசியல் சுற்றுப்பயண பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் சுற்றுப்பயண பிரசாரக் கூட்டங்கள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் நாகையில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. 

பல நிபந்தனைகளுக்கு மத்தியில் நடைபெற்ற குறித்த பிரசாரக் கூட்டத்தில் நண்பகல் 12.25 க்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உரையாற்றினார். 

இதன்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாட்டின் போது இந்திய கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து தான் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதாகத் தெரிவித்த விஜய், இந்திய கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பு மட்டுமல்ல, இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு குறித்தும் கவனம் செலுத்த வேண்டியது எமது கடமை எனக் குறிப்பிட்டார். 

மேலும், எமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள் உலகத்தின் எங்கு இருந்தாலும், தாயின் அன்பைக் காட்டிய தலைவனை இழந்த அவர்களுக்காகவும் குரல் கொடுப்பதும் எமது கடமை எனத் தெரிவித்தார். 

அத்தோடு, இந்திய கடற்றொழிலாளர்களின் உயிர் எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஈழத்தமிழர்களின் கனவுகளும் அவர்களது வாழ்க்கையும் மிக முக்கியம் எனவும் அவர் தெரிவித்தார்.

கடற்றொழிலாளர்களுக்கான நிரந்த தீர்வு தமிழக வெற்றிக் கழகத்தாலேயே கிடைக்கும்

 தமிழக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கடிதம் மாத்திரம் எழுதுவதற்கு தாம் ஒன்றும் தி.மு.க அரசு கிடையாது எனவும் விஜய் தெரிவித்துள்ளார்.

வேறு மாநிலங்களை சேர்ந்த கடற்றொழிலாளர்களை இந்திய கடற்றொழிலாளர்கள் எனவும் தமிழகத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களை வேறு பிரித்துத் தமிழக கடற்றொழிலாளர்கள் என கூறும் பா.ஜ.க போன்றவர்கள் தாம் இல்லையெனவும் குறிப்பிட்டார்.

கடற்றொழிலாளர்களினுடைய பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் நோக்கம் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தாய்ப் பாசம் காட்டிய தலைவனை இழந்த ஈழத்தமிழர்கள்; அவர்களுக்காக குரல் கொடுப்பது எமது கடமை விஜயின் அதிரடிப் பேச்சு  இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பதும், அவர்களது கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் எமது கடமை எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசியல் சுற்றுப்பயண பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் சுற்றுப்பயண பிரசாரக் கூட்டங்கள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் நாகையில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. பல நிபந்தனைகளுக்கு மத்தியில் நடைபெற்ற குறித்த பிரசாரக் கூட்டத்தில் நண்பகல் 12.25 க்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உரையாற்றினார். இதன்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாட்டின் போது இந்திய கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து தான் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதாகத் தெரிவித்த விஜய், இந்திய கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பு மட்டுமல்ல, இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு குறித்தும் கவனம் செலுத்த வேண்டியது எமது கடமை எனக் குறிப்பிட்டார். மேலும், எமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள் உலகத்தின் எங்கு இருந்தாலும், தாயின் அன்பைக் காட்டிய தலைவனை இழந்த அவர்களுக்காகவும் குரல் கொடுப்பதும் எமது கடமை எனத் தெரிவித்தார். அத்தோடு, இந்திய கடற்றொழிலாளர்களின் உயிர் எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஈழத்தமிழர்களின் கனவுகளும் அவர்களது வாழ்க்கையும் மிக முக்கியம் எனவும் அவர் தெரிவித்தார்.கடற்றொழிலாளர்களுக்கான நிரந்த தீர்வு தமிழக வெற்றிக் கழகத்தாலேயே கிடைக்கும் தமிழக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கடிதம் மாத்திரம் எழுதுவதற்கு தாம் ஒன்றும் தி.மு.க அரசு கிடையாது எனவும் விஜய் தெரிவித்துள்ளார்.வேறு மாநிலங்களை சேர்ந்த கடற்றொழிலாளர்களை இந்திய கடற்றொழிலாளர்கள் எனவும் தமிழகத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களை வேறு பிரித்துத் தமிழக கடற்றொழிலாளர்கள் என கூறும் பா.ஜ.க போன்றவர்கள் தாம் இல்லையெனவும் குறிப்பிட்டார்.கடற்றொழிலாளர்களினுடைய பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் நோக்கம் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement