• Sep 17 2024

முல்லைத்தீவில் வாக்குச் சீட்டைப் படம் எடுத்த ஆசிரியர் கைது..!

Sharmi / Sep 7th 2024, 6:49 pm
image

Advertisement

வாக்குச்சீட்டில் புள்ளடியிட்ட பின்பு அதனை ஒளிப்படம் எடுத்த ஆசிரியர் ஒருவர் முல்லைத்தீவில் இன்று கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தபால் மூல வாக்களிப்பின்போது, புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் நேற்றையதினம்(06) வாக்குச்சீட்டைப் புள்ளடியிட்ட பின்னர் கைத்தொலைபேசி மூலம் படம் எடுத்துள்ளார். 

இதனை உடனடியாகவே தேர்தல் கடமையில இருந்த அதகாரிகள் கண்டுகொண்டதால் மேற்படி ஆசிரியர் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டார்.

இதையடுத்து குறித்த ஆசிரியர் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு என்பவற்றின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

தேர்தல்கள் செயலகம், முல்லைத்தீவு பொலிஸார் ஆகியோர் இணைந்து இன்று மேற்கொண்ட விசாரணையில், மேற்படி ஆசிரியர் சங்குச் சின்னத்துக்கு வாக்களித்த வாக்குச்சீட்டைப் படம் எடுத்தமை கண்டுகொள்ளப்பட்டது. இதையடுத்து அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் குறித்த ஆசிரியரை நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


முல்லைத்தீவில் வாக்குச் சீட்டைப் படம் எடுத்த ஆசிரியர் கைது. வாக்குச்சீட்டில் புள்ளடியிட்ட பின்பு அதனை ஒளிப்படம் எடுத்த ஆசிரியர் ஒருவர் முல்லைத்தீவில் இன்று கைது செய்யப்பட்டார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தபால் மூல வாக்களிப்பின்போது, புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் நேற்றையதினம்(06) வாக்குச்சீட்டைப் புள்ளடியிட்ட பின்னர் கைத்தொலைபேசி மூலம் படம் எடுத்துள்ளார். இதனை உடனடியாகவே தேர்தல் கடமையில இருந்த அதகாரிகள் கண்டுகொண்டதால் மேற்படி ஆசிரியர் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டார்.இதையடுத்து குறித்த ஆசிரியர் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு என்பவற்றின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.தேர்தல்கள் செயலகம், முல்லைத்தீவு பொலிஸார் ஆகியோர் இணைந்து இன்று மேற்கொண்ட விசாரணையில், மேற்படி ஆசிரியர் சங்குச் சின்னத்துக்கு வாக்களித்த வாக்குச்சீட்டைப் படம் எடுத்தமை கண்டுகொள்ளப்பட்டது. இதையடுத்து அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் குறித்த ஆசிரியரை நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement