• Oct 19 2024

தனியார் காணியில் வடமாகாண ஆளுநரின் அனுமதியின் பேரில் கட்டப்பட்ட விகாரை அகற்றப்பட வேண்டும்- கஜேந்திரன் எம். பி கோரிக்கை!samugammedia

Tamil nila / May 3rd 2023, 9:29 pm
image

Advertisement

தனியார் காணியில் வடமாகாண ஆளுநரின் அனுமதியின் பேரில் கட்டப்பட்ட விகாரை அகற்றப்பட வேண்டும் என  பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தையிட்டியில்  இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

1990 ம் ஆண்டு ஹீலங்கா இராணுவத்தினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டிருந்தார்கள். யுத்தம் முடிவடைந்து 14 வருடங்கள் ஆகின்ற நிலையில் மக்களின் பெருமளவிலான காணிகள் இன்றுவரை ஒப்படைக்கவில்லை.

தனியார் காணியில் வடமாகாண ஆளுநரின் அனுமதியின் பேரில் கட்டப்பட்ட விகாரை அகற்றப்படுவதுடன் தனியார் காணிகள் யாவும் மக்ளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது எமது கோரிக்கையாகக் காணப்படுகின்றது.

சர்வதேச   ஐ.சி.பி.ஆர் சட்ட  நியமங்களின்படி தமிழர் சிஙகளவருக்கிடையி்ல் இன முறுகலை ஏற்படுத்தும் விதமாக இவ் விகாராதிபதி , இராணுவத்தினர் மற்றும் இதற்குதவிய  அரச திணைக்களங்கள் ஆகியவை  சர்வதேச சட்டத்தை மீறியுள்ளன. அந்த வகையி்ல் இவர்களுக்கெதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

எதிர்வரும் 5 ம் திகதி வரை இப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதுடன் இவ் விகாரை செயற்பாடுகளை முற்று முழுதாக முடக்கும் வரையில் தொடர்ந்தும் போராட்டங்களில் ஈடுபடவுள்ளோம். - என்றார்

தனியார் காணியில் வடமாகாண ஆளுநரின் அனுமதியின் பேரில் கட்டப்பட்ட விகாரை அகற்றப்பட வேண்டும்- கஜேந்திரன் எம். பி கோரிக்கைsamugammedia தனியார் காணியில் வடமாகாண ஆளுநரின் அனுமதியின் பேரில் கட்டப்பட்ட விகாரை அகற்றப்பட வேண்டும் என  பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.தையிட்டியில்  இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,1990 ம் ஆண்டு ஹீலங்கா இராணுவத்தினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டிருந்தார்கள். யுத்தம் முடிவடைந்து 14 வருடங்கள் ஆகின்ற நிலையில் மக்களின் பெருமளவிலான காணிகள் இன்றுவரை ஒப்படைக்கவில்லை.தனியார் காணியில் வடமாகாண ஆளுநரின் அனுமதியின் பேரில் கட்டப்பட்ட விகாரை அகற்றப்படுவதுடன் தனியார் காணிகள் யாவும் மக்ளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது எமது கோரிக்கையாகக் காணப்படுகின்றது.சர்வதேச   ஐ.சி.பி.ஆர் சட்ட  நியமங்களின்படி தமிழர் சிஙகளவருக்கிடையி்ல் இன முறுகலை ஏற்படுத்தும் விதமாக இவ் விகாராதிபதி , இராணுவத்தினர் மற்றும் இதற்குதவிய  அரச திணைக்களங்கள் ஆகியவை  சர்வதேச சட்டத்தை மீறியுள்ளன. அந்த வகையி்ல் இவர்களுக்கெதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.எதிர்வரும் 5 ம் திகதி வரை இப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதுடன் இவ் விகாரை செயற்பாடுகளை முற்று முழுதாக முடக்கும் வரையில் தொடர்ந்தும் போராட்டங்களில் ஈடுபடவுள்ளோம். - என்றார்

Advertisement

Advertisement

Advertisement