கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லுர்து மாவத்தையில், பாதுகாப்பற்ற ரயில் கடவையில், ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலிலுடனே மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துடன்,
பின்னால் பயணித்த 17 வயது நபர் பலத்த காயங்களுடன் நீர்கொழும்பு வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர், நீர்கொழும்பு, பெரியமுல்ல பள்ளி வீதியைச் சேர்ந்த 61 வயதானவர் என தெரியவந்துள்ளது.
சடலம் நீர்கொழும்பு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது,
இந்த சம்பவம் குறித்து கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பாதுகாப்பற்ற ரயில் கடவையால் நேர்ந்த சோகம்; ஸ்தலத்திலேயே ஒருவர் பலி கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லுர்து மாவத்தையில், பாதுகாப்பற்ற ரயில் கடவையில், ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலிலுடனே மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துடன், பின்னால் பயணித்த 17 வயது நபர் பலத்த காயங்களுடன் நீர்கொழும்பு வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர், நீர்கொழும்பு, பெரியமுல்ல பள்ளி வீதியைச் சேர்ந்த 61 வயதானவர் என தெரியவந்துள்ளது. சடலம் நீர்கொழும்பு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது, இந்த சம்பவம் குறித்து கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.