• Dec 03 2024

சீரற்ற காலநிலையால் நேர்ந்த துயரம்; சரிந்து விழுந்த மண்மேட்டில் சிக்கி பெண் பலி!

Chithra / Nov 26th 2024, 10:48 am
image


சீரற்ற வானிலை காரணமாக பண்டாரவளை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

61 வயதான பெண் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெண் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பண்டாரவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


சீரற்ற காலநிலையால் நேர்ந்த துயரம்; சரிந்து விழுந்த மண்மேட்டில் சிக்கி பெண் பலி சீரற்ற வானிலை காரணமாக பண்டாரவளை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.61 வயதான பெண் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.இந்த சம்பவம் இன்று காலை 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பெண் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்த பெண்ணின் சடலம் பண்டாரவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement