• Jun 04 2026

நாட்டுக்கு வந்த விருந்தாளிக்கு நடந்த அவலம்- இணையத்தில் கொதிக்கும் விவாதம்!

Ziya / Jun 3rd 2026, 12:42 pm
image

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இன்முகத்தோடு வரவேற்பது நம் வழக்கம் என்றாலும்,  திருகோணமலையில் அரங்கேறிய ஒரு விசித்திரமான சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.


திருகோணமலையிலிருந்து புல்மொட்டை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றில், வெளிநாட்டு பெண் பயணி ஒருவர் இருக்கைகள் ஏதுமின்றி, பேருந்தின் தரையிலேயே அமர்ந்து சாதாரணமாகத் தனது மொபைலைப் பார்த்தபடி பயணிக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.


அதே பேருந்தின் இருக்கைகளில் உள்நாட்டு பயணிகள் குறிப்பாக ஆண்கள் பலர் அமர்ந்திருக்கிறார்கள். ஒரு பெண், அதுவும் நம் நாட்டுக்கு வந்த விருந்தாளி தரையில் அமர்ந்திருந்தும், யாரும் அவருக்கு இருக்கை தந்து உதவ முன்வரவில்லை என்ற கடுமையான குற்றச்சாட்டோடு இந்த விவாதம் எழுந்துள்ளது.


இந்த புகைப்படத்தைப் பார்த்த சமூக வலைத்தளவாசிகள் தற்போது இரண்டு அணிகளாகப் பிரிந்து  கருத்த பகிர்ந்து வருகிறனர்.


"ஒரு பெண் தரையில் அமர்ந்திருக்கும் போது ஆண்கள் எப்படி சீட்டில் அமர்ந்திருக்க முடியும்? அதுவும் நம் நாட்டை நம்பி வந்த சுற்றுலாப் பயணிக்கு நாம் கொடுக்கும் மரியாதை இதுதானா? இங்கிருந்த ஆண்களுக்குக் கொஞ்சம் கூட மனிதநேயம் இல்லையா?" என ஒரு தரப்பினர் கொதித்தெழுந்துள்ளனர்.


மறுபுறம், வெளிநாட்டு பயணிகள் பலருக்கு இது போன்ற சாதாரண பேருந்து பயணங்களும், தரையில் அமர்வதும் ஒரு சாகசம் தான்! யாராவது சீட் கொடுத்திருந்தாலும் ‘பரவாயில்லை’ என அவர் மறுத்திருக்கக்கூடும். உண்மை தெரியாமல் நம் நாட்டு ஆண்களைக் குறை கூற வேண்டாம்" எனப் பதில் அளித்து வருகின்றனர்.


 நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு பாதுகாப்பான, கௌரவமான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது நம் அனைவரினதும் கடமை என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் நினைவூட்டியுள்ளது.

நாட்டுக்கு வந்த விருந்தாளிக்கு நடந்த அவலம்- இணையத்தில் கொதிக்கும் விவாதம் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இன்முகத்தோடு வரவேற்பது நம் வழக்கம் என்றாலும்,  திருகோணமலையில் அரங்கேறிய ஒரு விசித்திரமான சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.திருகோணமலையிலிருந்து புல்மொட்டை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றில், வெளிநாட்டு பெண் பயணி ஒருவர் இருக்கைகள் ஏதுமின்றி, பேருந்தின் தரையிலேயே அமர்ந்து சாதாரணமாகத் தனது மொபைலைப் பார்த்தபடி பயணிக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.அதே பேருந்தின் இருக்கைகளில் உள்நாட்டு பயணிகள் குறிப்பாக ஆண்கள் பலர் அமர்ந்திருக்கிறார்கள். ஒரு பெண், அதுவும் நம் நாட்டுக்கு வந்த விருந்தாளி தரையில் அமர்ந்திருந்தும், யாரும் அவருக்கு இருக்கை தந்து உதவ முன்வரவில்லை என்ற கடுமையான குற்றச்சாட்டோடு இந்த விவாதம் எழுந்துள்ளது.இந்த புகைப்படத்தைப் பார்த்த சமூக வலைத்தளவாசிகள் தற்போது இரண்டு அணிகளாகப் பிரிந்து  கருத்த பகிர்ந்து வருகிறனர்."ஒரு பெண் தரையில் அமர்ந்திருக்கும் போது ஆண்கள் எப்படி சீட்டில் அமர்ந்திருக்க முடியும் அதுவும் நம் நாட்டை நம்பி வந்த சுற்றுலாப் பயணிக்கு நாம் கொடுக்கும் மரியாதை இதுதானா இங்கிருந்த ஆண்களுக்குக் கொஞ்சம் கூட மனிதநேயம் இல்லையா" என ஒரு தரப்பினர் கொதித்தெழுந்துள்ளனர்.மறுபுறம், வெளிநாட்டு பயணிகள் பலருக்கு இது போன்ற சாதாரண பேருந்து பயணங்களும், தரையில் அமர்வதும் ஒரு சாகசம் தான் யாராவது சீட் கொடுத்திருந்தாலும் ‘பரவாயில்லை’ என அவர் மறுத்திருக்கக்கூடும். உண்மை தெரியாமல் நம் நாட்டு ஆண்களைக் குறை கூற வேண்டாம்" எனப் பதில் அளித்து வருகின்றனர். நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு பாதுகாப்பான, கௌரவமான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது நம் அனைவரினதும் கடமை என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் நினைவூட்டியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement