2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்து தொடர்பில் ஆதாரங்களை மறைத்து, போலியாக தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க இன்று(30) ஒத்திவைத்தார்.
சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்த விதம் சட்டத்திற்கு முரணானது என்றும், பிரதிவாதியான பாட்டலி சம்பிக்க ரணவக்க, அதை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதாகவும் கூறி, மேன்முறையீடு தொடர்பான முடிவு கிடைக்கும் வரை வழக்கை ஒத்திவைக்குமாறு பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டனர்.
கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை ஜூலை 25 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
சம்பிக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு. 2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்து தொடர்பில் ஆதாரங்களை மறைத்து, போலியாக தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க இன்று(30) ஒத்திவைத்தார்.சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்த விதம் சட்டத்திற்கு முரணானது என்றும், பிரதிவாதியான பாட்டலி சம்பிக்க ரணவக்க, அதை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதாகவும் கூறி, மேன்முறையீடு தொடர்பான முடிவு கிடைக்கும் வரை வழக்கை ஒத்திவைக்குமாறு பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டனர்.கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை ஜூலை 25 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.